Elon Musk : சொந்தமாக ஒரு ஏர்போர்ட்..?! எலான் போடும் மாஸ்டர் ப்ளான் என்ன? கசிந்த தகவல்!
SpaceX மற்றும் Boring Company உள்ளிட்ட எலானின் நிறுவனங்கள் டெக்சாஸை மையமாக வைத்தே இயங்குகின்றன. கடந்த டிசம்பரில் டெஸ்லா தலைமையகத்தை சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து டெக்சாஸுக்கு மாற்றினார்.
எலெக்ட்ரிக் காரை தயாரித்துக்கொண்டு இன்றைக்கான தேவையை மட்டுமே யோசிக்காதவர் எலான் மஸ்க். டெஸ்லா போட் என்ற எதிர்காலத்துக்கான ரோபோவையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பூமிக்கு மட்டுமே அவர் சிந்திக்கவில்லை, செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் செல்வது குறித்து ப்ளான் செய்கிறார்.
டெஸ்லா என்ற கார் நிறுவனத்தின் ஓனர் என்ற தொடக்கப்புள்ளியிலேயே நமக்கெல்லாம் எலான் மஸ்க் அறிமுகம். உலகில் எத்தனையோ கார் நிறுவனங்கள் உள்ளன. அனைத்துக்கும் ஓனர் உண்டு. ஆனால் எலான் மஸ்க் வெறும் கார் கம்பெனியின் ஓனர் அல்ல. அவரது திட்டம் அடுத்து.. அடுத்து.. என மேலே மேலே சென்றுகொண்டே இருக்கிறது. தானியங்கி கார், ஸ்பேஸ் எக்ஸ், எதிர்காலத்துக்கான ரோபோ என பலத்திட்டங்களை கையில் வைத்திருக்கும் எலான், தற்போது சொந்தமாக ஒரு ஏர்போர்ட்டையே உருவாக்க உள்ளாராம். எலோன் மஸ்க் தனது சொந்த தனியார் விமான நிலையத்தை டெக்சாஸில் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Single-piece casting reduces weight, greatly simplifies factory, increases ride quality & reduces road noise https://t.co/hJw4KLpfDg
— Elon Musk (@elonmusk) July 25, 2022
SpaceX மற்றும் Boring Company உள்ளிட்ட எலானின் நிறுவனங்கள் டெக்சாஸை மையமாக வைத்தே இயங்குகின்றன. கடந்த டிசம்பரில் டெஸ்லா தலைமையகத்தை சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து டெக்சாஸுக்கு மாற்றினார். இதையெல்லாம் வைத்துப்பார்த்தால் தன்னுடைய புது ஏர்போர்ட்டை டெக்சாஸில்தான் அமைப்பார் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மஸ்க்கின் நிறுவனங்கள் மத்திய டெக்சாஸில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்திருக்கின்றன. இதில் கிகா டெக்சாஸுக்கு 2,100 ஏக்கர் உள்ளது, அதே நேரத்தில் SpaceX மற்றும் போரிங் நிறுவனமும் சமீபத்திய ஆண்டுகளில் நிலத்தை கையகப்படுத்தி வருகின்றன. பெரும் நிலப்பரப்பு வேண்டும், அரசின் அனுமதி பெற வேண்டும், சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும் என ஒரு விமான நிலையம் தொடங்க பல வேலைகள் இருப்பதால் எலானுக்கு ஏர்போர்ட் அமைக்க தற்போது என்ன அவசியம் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் எதையுமே ப்ளான் இல்லாமல் செய்யாத எலான் ஏர்போர்ட் விவகாரத்திலும் எதாவது கதை வைத்திருப்பார் எனக் கூறப்படுகிறது. விமான நிலையம் தொடர்பாக எலான் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்காத நிலையில் தகவல் உண்மை என்றால் விரைவில் இதுகுறித்து எலான் வாயைத்திறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்