Twitter: எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாக குழுவில் இணையவில்லை - டிவிட்டர் சி.இ.ஓ. பராக் அகர்வால் தகவல்!
எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாக குழுவில் இணையவில்லை.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் (Tesla and SpaceX CEO) முதன்மை செயல் தலைவர் எலான் மஸ்க் ( Elon Musk) டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இணையும் முடிவை மாற்றிக்கொண்டதாகவும், எலான் நிர்வாக குழுவில் எந்த பொறுப்பையும் வகிக்க மாட்டார் என்றும் டிவிட்டர் முதன்மை செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகிம் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பின்பு,அதன் நிர்வாக குழுவில் இணைய முடிவு செய்திருந்தார். இந்நிலையில், அவர் டிவிட்டர் நிர்வாக குழுவில் ஓர் உறுப்பினராக இணையும் முடிவை திரும்ப பெற்றுகொண்டார். எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாக குழுவில் இணைய உள்ளார் என கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்தி டிவிட்டர் முதன்மை செயல் தலைவர் பாராக் அகர்வால் (Parag Agrawal), எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாக குழுவில் உறுப்பினாராக அங்கம் வகிக்க மாட்டார் என்பதை உறுதி செய்துள்ளார்.
Elon has decided not to join our board. I sent a brief note to the company, sharing with you all here. pic.twitter.com/lfrXACavvk
— Parag Agrawal (@paraga) April 11, 2022
இதுகுறித்து பாராக் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ”எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாக குழுவில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளார். என்ன நடந்தது என்பதை உங்களிடம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
எலாம் மஸ்க் உடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தோம். எங்கள் நிறுவனத்திற்கு நம்பதகுந்த ஓர் ஆளுமையின் அறிவும் புதிய ஐடியாக்களும் கிடைக்க இருந்ததாக நம்பினோம். எங்கள் நிர்வாக குழுவில் உள்ளவர்கள் போலவே, நிறுவனத்தின் பங்குதாரர்களும், டிவிட்டரின் வளர்ச்சியை புதிய பரிணாமத்திற்கு இட்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதன் அடிப்படையில், எங்கள் நிர்வாக குழுவில் எலான் மஸ்க்கிற்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
எலான் மஸ்கின் இந்த முடிவும் எங்களின் நன்மைக்கே என்று நம்புகிறோம். எதிர்வரும் காலங்களில், எங்களின் பங்குதாரர்களிடமிருந்து மதிப்புமிக்க திட்டங்களையும், ஆக்கப்பூர்வமான ஐடியாக்களையும் பெறுவோம். பங்குதாரர்கள், எங்கள் நிர்வாக குழுவில் இருந்தாலும், இல்லையென்றாலும் இந்த முடிவுதான். எலான் மஸ்க் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரர். அவர் எங்கள் நிர்வாக குழுவில் இருந்தாலும், இல்லையென்றாலும், எங்களின் பங்குதாரராக, அவரிடமிருந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கான புதிய சிந்தனைகளை பெற்றுக் கொள்வோம்.” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், டிவிட்டர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான குறிக்கோள்கள் மற்றும் திட்டங்கள், எவ்வித தடைகள், கவனச்சிதறலும் இன்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கான முயற்சியில் பயணிப்போம். ஒரு திட்டம் குறித்து முடிவு எடுப்பது, அதை செயல்படுத்துவதும் நம் கைகளிலேயே இருக்கிறது. நம் வேலையில் நாம் கவனத்துடம் முன்னேறுவோம். நம் பணிகளை தொடர்ந்து கவனமுடன் செய்வோம்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இம்மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்