Elon Musk Tweet : 2017ம் ஆண்டே ட்விட்டரின் விலையை கேட்ட எலான் மஸ்க்..! வைரலாகும் ட்வீட்
2017ம் ஆண்டே ட்விட்டரின் விலை என்ன என்று கேட்ட எலான்மஸ்க்கின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மாஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பி வரும் எலான் மாஸ்க் உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கியுள்ளார். 44 பில்லியனுக்கு ட்விட்டரை அவர் வாங்கியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
This exchange continues to haunt me pic.twitter.com/W06oSqx0MR
— Dave Smith (@redletterdave) April 25, 2022
இந்த நிலையில், எலான் மாஸ்க்கின் பழைய ட்விட்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, 2017ம் ஆண்டு எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் ட்விட்டரை மிகவும் நேசிக்கிறேன் என்று கருத்து பதிவிட்டுள்ளார். அதற்கு டேவ் ஸ்மித் என்பவர் நீங்கள் அதை வாங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டர் என்ன விலை? என்று பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.
🚀💫♥️ Yesss!!! ♥️💫🚀 pic.twitter.com/0T9HzUHuh6
— Elon Musk (@elonmusk) April 25, 2022
தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ட்விட்டரை சொந்தமாக வாங்கியுள்ளார். மேலும், பங்குச்சந்தை நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டு தனிநபர் நிறுவனமாக இனி ட்விட்டர் செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல துறைகளில் கால்தடம் பதித்து சாதித்து வரும் எலான் மஸ்க் தற்போது ட்விட்டரையும் தன்வசப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதுடன், ட்விட்டரில் மிகவும் மோசமாக விமர்சிப்பவர்களும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்