Elon Musk: அமெரிக்க அரசியல், மான்செஸ்டர் அணி, அம்மா செண்டிமெண்ட்... ட்விட்டரில் படு ஆக்டிவான எலான் மஸ்க்!
ட்விட்டரில் மொத்தம் 10 கோடியே 30 லட்சம் பேர் எலான் மஸ்க்கை பின் தொடர்கின்றனர்.

உலகின் மிகப் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களில் சிஇஓவுமான எலான் மஸ்க் ட்விட்டரில் வேடிக்கையாகவும் சர்ச்சைக்குரிய, விவாதங்களைக் கிளப்பும் ட்வீட்கள் பகிர்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
மொத்தம் 10 கோடியே 30 லட்சம் பேர் ட்விட்டரில் எலான் மஸ்க்கை பின் தொடர்கின்றனர்.
தாயாக இருப்பது...
இந்நிலையில், தாயாக இருப்பது உலகின் எந்த ஒரு தொழிலையும் போல் முக்கியமானது தான் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Being a Mom is just as important as any career
— Elon Musk (@elonmusk) August 17, 2022
’மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’
முன்னதாக, ஃபுட்பால் உலகின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணியை தான் வாங்க உள்ளதாக முன்னதாக ட்விட்டரில் எலான் மஸ்க் பகிர்ந்திருந்தார்.
மான்செஸ்டர் யுனைடெட், உலகின் மிகப் பிரபலமான கால்பந்து கிளப்புகளில் ஒன்றாகும். இங்கிலாந்து உள்ளூர் கால்பந்து கிளப் அணியான இந்த அணி கிளேசர் எனும் குடும்பத்துக்கு சொந்தமானது.
முன்னதாக, அமெரிக்காவின் இருபெரும் அரசியல் கட்சிகளான, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டுக்கும் ஆதரவு அளிப்பது குறித்த ட்வீட் ஒன்றை எலான் மஸ்க் பகிர்ந்தார்.
Also, I’m buying Manchester United ur welcome
— Elon Musk (@elonmusk) August 17, 2022
அதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடட் அணியை வாங்கப்போவதாக எலான் மஸ்க் மற்றொரு ட்வீட்டை பகிர்ந்திருந்தார். இந்த ட்வீட் கிட்டத்தட்ட 7 லட்சம் லைக்குகளைக் குவித்து தொடர்ந்து ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தான் எந்த அணியையும் வாங்கவில்லை என்றும், விளையாட்டாக அதனைத் தெரிவித்ததாகவும், ட்விட்டரில் நீண்ட காலமாக தொடரும் நகைச்சுவை இது என்றும் முன்னதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டு, பின் போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தனக்கு அளிக்கவில்லை என்று கூறி தன் முடிவைக் கைவிட்டு சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















