மேலும் அறிய

Earthquake: அடுத்தடுத்து நடுநடுங்க வைக்கும் நிலநடுக்கம்! டோங்கோ நாட்டில் 7.4 அளவில் பதிவு.. சுனாமி ஆபத்தா?

ஹிஹிஃபோ என்பது டோங்காவின் முக்கிய தீவுக் கூட்டத்திற்கு வடக்கே உள்ள நியுடோபுடாபு தீவில் உள்ள முக்கிய கிராமமாகும்.

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவுக்கூட்டமான டோங்கா நாட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 212 கிமீ (132 மைல்) ஆழத்திலும், டோங்காவின் ஹிஹிஃபோவில் இருந்து வடமேற்கே 73 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிஹிஃபோ என்பது டோங்காவின் முக்கிய தீவுக் கூட்டத்திற்கு வடக்கே உள்ள நியுடோபுடாபு தீவில் உள்ள முக்கிய கிராமமாகும்.

7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 20 முதல் 30 வினாடிகள் வரை நீடித்ததாக உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். 

7.4 என்ற ரிக்டர் அளவை தொடர்ந்து அதிகாலை 4.30 மணியளவில் 5.1 என்ற ரிக்டர் அளவில் மோவா மற்றும் வாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

கடந்த ஜனவரி 14ம் தேதி அன்றும் டோங்காவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கடந்த நவம்பரில், டோங்கா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 15.4 மைல் ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி நள்ளிரவில், பசிபிக் தீவுக்கூட்டத்தின் வடகிழக்கில் உள்ள நகரமான நியாஃபுவின் தென்கிழக்கில் இருந்து கிழக்கே சுமார் 128.6 மைல் தொலைவில் கடலில் ஏற்படுத்தியது. 

ஜப்பானிலும் நிலநடுக்கம்:

ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சிபாவில் உள்ள கிசராசு நகரில் வலுவாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கதால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman On Vijay: ”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” - விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக

IND Vs PAK: ஊமை குத்தாய் குத்திவிட்ட இந்தியா.. கைகொடுக்க மறுத்த ஸ்கை பாய்ஸ்.. பாகிஸ்தான் படுதோல்வி

Govt Job Scam: இது உலகமகா ஸ்கேம்.. ஒரே நபருக்கு 6 வேலைகள், 6 சம்பளம் - உ.பி., அரசை உலுக்கிய ஃப்ராட் கேங்

IND vs PAK: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. பேட்டிங்கில் கிளாஸ்.. பவுலிங்கில் மாஸ் - சாதித்த சூர்யா படை

ABP Premium

வீடியோ

”கதறிட்டு இருக்காங்க! விரக்திய கக்குறீங்களா” ஸ்டாலின் vs விஜய்
Seerkazhi Govt Hospital : தரையில் உறங்கும் நோயாளிகள்படுக்கைகள் பற்றாக்குறை!அரசு மருத்துவமனையில் அவலம்
விதியை மீறினாரா ராகுல்? வெளிநாட்டு பயண சீக்ரெட்! பற்றவைத்த பாஜக
”EX IPS-னு போடுங்க போதும்” பாஜகவை ERASE செய்த அண்ணாமலை? டெல்லி மீட்டிங் TO அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman On Vijay: ”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” - விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக
Seeman On Vijay: ”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” - விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக
IND Vs PAK: ஊமை குத்தாய் குத்திவிட்ட இந்தியா.. கைகொடுக்க மறுத்த ஸ்கை பாய்ஸ்.. பாகிஸ்தான் படுதோல்வி
IND Vs PAK: ஊமை குத்தாய் குத்திவிட்ட இந்தியா.. கைகொடுக்க மறுத்த ஸ்கை பாய்ஸ்.. பாகிஸ்தான் படுதோல்வி
Govt Job Scam: இது உலகமகா ஸ்கேம்.. ஒரே நபருக்கு 6 வேலைகள், 6 சம்பளம் - உ.பி., அரசை உலுக்கிய ஃப்ராட் கேங்
Govt Job Scam: இது உலகமகா ஸ்கேம்.. ஒரே நபருக்கு 6 வேலைகள், 6 சம்பளம் - உ.பி., அரசை உலுக்கிய ஃப்ராட் கேங்
IND vs PAK: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. பேட்டிங்கில் கிளாஸ்.. பவுலிங்கில் மாஸ் - சாதித்த சூர்யா படை
IND vs PAK: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. பேட்டிங்கில் கிளாஸ்.. பவுலிங்கில் மாஸ் - சாதித்த சூர்யா படை
Ind vs Pak : பும்ராவின் 5 வருட சாதனை! 2 சிக்சர்கள் தான்! சல்லி சல்லியா நொறுக்கிய பாக் இளம் வீரர்

Dhanush Speech : துரோகம் பழகிடுச்சு..களத்துல நம்ம பசங்கதான்..இட்லி கடை தனுஷ் மாஸ் பேச்சு

DMK vs TVK: பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Asia Cup Controversy: தேசிய கீதத்திற்கு பதிலாக ஒலித்த ஜிலேபி பேபி பாடல்.. குழம்பி நின்ற பாக் வீரர்கள்! ஆசியக்கோப்பையில் சர்ச்சை

Embed widget