மேலும் அறிய
Taiwan Earthquake: தைவானில் அதிபயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை: ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு
Taiwan Earthquake:தைவான் கடற்கரை பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவாகியுள்ளது. . சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தைவானில் நிலநடுக்கம்
Taiwan Earthquake: தைவான் கடற்கரை பகுதியில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் தைவான் நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகாள் குறித்து இன்னும் எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
சீன நாட்டில் இதே வாரத்தில் சில நாட்களுக்கு முன் நில நடுக்கம் வந்து உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில், நடுக்கடலில் தொடங்கிய நிலநடுக்கம், அப்படியே தொடர்ந்து நிலப்பரப்புக்கும் வந்தது. இதனால் கட்டிடங்களும், வீடுகளும் இடிந்து விழுந்து நொறுங்கின.
View this post on Instagram
இந்த நில நடுக்கம் கடலோர நகரான டைட்டாங்கிற்கு சற்றுத் தொலையில் உள்ள பகுதியில் தோன்றியதாகவும், இது 7.2 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. கட்டிடங்கள் வீடுகள் அதிர்ந்ததாலும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வீதிகளில் குவிந்தனர். தைவான் நாட்டில் நி ல நடுக்க அலகு 7.0 ஆக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்படும் நிலையில் இன்று வந்த நிலநடுக்கம் 7.2 ஆக இருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















