மேலும் அறிய

Plane Clip | ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விமானங்கள் : 2 மணிநேரம் மூடப்பட்ட ஓடுதள பாதை..!

துபாயில் இரு விமானங்களின் வால் பகுதி ஒன்றுடன் ஒன்றுடன் மோதிக்கொண்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 2 மணிநேரம் ஓடுதள பாதை மூடப்பட்டது.

உலகின் மிகவும் முக்கியமான நகரங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மிகவும் குறிப்பிடத்தக்கது. எப்போதும் பரப்பாக காணப்படும் துபாய் நகரத்தைப் போலவே, துபாய் விமான நிலையமும் எப்போதும் பரப்பாக காணப்படும். பல தொலைதூர தேசங்களுக்கு செல்லும் நாடுகளுக்கு இடையே விமானங்கள் நின்று செல்லும் விமான நிலையமாகவும் துபாய் விமான நிலையம் திகழ்கிறது. கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் முடங்கியிருந்த துபாய் விமான நிலையம் கடந்த சில வாரங்களாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. துபாய் விமான நிலையத்தில் டாக்சி வே மற்றும் ரன் வே என்று இரு ஓடுதள பாதைகள் உள்ளது. இதில் டாக்சி வே ஓடுதளப் பாதையானது விமான நிலைய முனையத்தில் நின்று கொண்டு இருக்கும் விமானங்கள் ஓடுபாதைக்கு செல்லும் பாதையாகும்.

Plane Clip | ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விமானங்கள் : 2 மணிநேரம் மூடப்பட்ட ஓடுதள பாதை..!

இதில் நேற்று டாக்சி வே ஓடுதள பாதையில் கிர்ஜிஸ்தான் நாட்டின் மனாஸ் நகரத்திற்கு செல்வதற்காக எப்.இசட். 1461 போயிங் ரக விமானம் தயாராகிக் கொண்டு இருந்தது.  இந்த விமானம் 737-800 நவீன போயிங் ரக விமானமாக உள்ளது. அதே சமயத்தில் கல்ப் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றும் பக்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவிற்கு புறப்படுவதற்காக டாக்சி வேயில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும் அருகருகே சென்றபோது, இரு விமானங்களின் வால் பகுதிகளும் ஒன்றுடன் ஒன்றுடன் மோதிக் கொண்டன. இதனால், விமானத்திற்கு உள்ளே சிறு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இரு விமானங்களின் உள்ளேயும் பயணிகள் இருந்தனர். திடீரென விமானம் அதிர்ந்ததால் விமானங்களின் உள்ளே இருந்த பயணிகள் பதற்றத்திற்கு உள்ளாகினர். உடனடியாக இரு விமானங்களின் விமானிகளும் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Plane Clip | ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விமானங்கள் : 2 மணிநேரம் மூடப்பட்ட ஓடுதள பாதை..!

இதையடுத்து, விமானங்கள் முனையத்திற்கு மீண்டும் வரவழைக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டு, பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக அந்த ஓடுபாதை தளம் உடனடியாக மூடப்பட்டது. ஓடுதளம், விமானங்கள் ஆகியவற்றின் இயல்பு நிலையை முழுவதும் பரிசோதித்த பிறகு நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துகொண்ட அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்புவதாக தெரிவித்தனர். ஃபிளை துபாய் நிறுவனம் தங்களது பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தது. மேலும், பயணிகள் அனைவரும் வேறு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தனர். அதேபோல, மற்றொரு விமானமான கல்ப் ஏர் விமான நிறுவனமும் தங்களது பயணிகளிடம் வருத்தம் தெரிவித்தது. மாற்று விமானம் மூலம் பயணிகளை பத்திரமாக அந்த நிறுவனமும் அனுப்பி வைத்தனர்.

இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், இந்த விபத்து தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget