மேலும் அறிய

Donald Trump: ரூ.692 கோடி அபராதம்.. பாலியல் புகார் தொடர்பான வழக்கில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பு..

Trump: அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 692 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில், மான்ஹாட்டன் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

டிரம்புக்கு ரூ.692 கோடி அபராதம்:

அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக பிரபல பத்திரிகையாளரான ஜீன் கரோல் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தனது குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்ததோடு, நம்பகமான பத்திரிகையாளர் என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் ஜீன் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான விசாரணை மான்ஹாட்டன் நடுவர் நீதிமன்றத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் முடிவில், மனுதாரருக்கு டிரம்ப் 83.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 692 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டிரம்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் தீவிரம் காட்டும் டிரம்ப்:

2020 ஆம் ஆண்டில் தன்னைத் தோற்கடித்த ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனை எதிர்த்து மீண்டும் களமிறங்க, குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் முன்னணியில் இருக்கிறார். வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள  அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள  டிரம்பிற்கு, கரோலின் தொடர்ந்துள்ள வழக்கு சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கின் விசாரணையில் கலந்து கொண்டாலும், தீர்ப்பு வழங்கும்போது அவர் அங்கு இல்லை. அதேநேரம், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,  "எங்கள் சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை, மேலும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இது அமெரிக்கா அல்ல" என்று குறிப்பிட்டு இருந்தார்.

கரோல் மகிழ்ச்சி:

தீர்ப்பு தொடர்பாக பேசிய 80 வயதான கரோல், "இது வீழ்த்தப்படும் போது எழுந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மேலும் ஒரு பெண்ணை வீழ்த்த முயற்சிக்கும் ஒவ்வொரு கொடுமைக்காரனுக்கும் மிகப்பெரிய தோல்வி" என்று குறிப்பிட்டார். முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற மற்றொரு அவதூறு வழக்கிலும், கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு மான்ஹாட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுகளும் - மறுப்பும்:

1990 களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனில் உள்ள பெர்க்டார்ஃப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் வைத்து,  ட்ரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கரோல் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு வழக்கும் தொடர்ந்தார். ஆனால் டிரம்ப்போ, ”கரோலைப் பற்றி தான் கேள்விப்பட்டதே இல்லை. தனது புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க கதையை உருவாக்கியுள்ளார்.  கரோல் புகழுக்கான பசியுடன் இருப்பதாகவும், தனக்கு எதிரானவர்களுக்கு எதிராக பேசுவதற்கு ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget