Jupiter’s closest date with Earth: பூமிக்கு மிக அருகில் வரும் வியாழன் கிரகம்! பார்க்கலாமா? கூடாதா? முழு விபரம் இதோ!
Jupiter: 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூமிக்கு மிக அருகில் வியாழன் கிரகம் வரவுள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வியாழன் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செப்டம்பர் 26 அன்று பூமிக்கு மிக அருகில் வியாழன் கிரகம் வரவுள்ளது. ராட்சத கிரகமான வியாழன் பூமிக்கு மிக அருகில் வரும் போது நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க ஆசைப்படும் பார்வையாளர்கள் ஒரு சிறந்த காட்சியை பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பின் பார்வையில், சூரியன் மேற்கில் அஸ்தமிக்கும் போது வியாழன் கிழக்கில் உதயமாகும். வியாழன் கிரகமானது ஒவ்வொரு 13 மாதங்களுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வருகிறது. இந்த ஆண்டு பூமிக்கு மிக அருகில் வரும் வியாழன் கிரகம் மற்ற நேரத்தைவிடவும் பிரகாசமாகவும் பெரிதாகவும் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. வழக்கமாக பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகம் பூமியில் இருந்து சுமார் 600 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் தோன்றும். ஆனால் இந்த முறை இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அருகில் வரவுள்ளது. அதாவது பூமியில் இருந்து சுமார், 350 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் தோன்றவிருக்கிறது.
மேலும் பூமிக்கு மிக அருகில் வரவுள்ள வியாழன் கிரகத்தை பார்க்க ஆசைப்படுபவர்கள் நல்ல தொலைநோக்கியுடன் அதாவது பைனாகுலருடன் பார்த்தால் நன்றாகவே வியாழன் கிரகத்தின் அழகினை பார்க்க முடியும் என நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தின் ஆராய்ச்சி வானியற்பியல் நிபுணர் ஆடம் கோபெல்ஸ்கி கூறியுள்ளார். மற்ற நேரத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் வியாழன் கிரகத்தை பார்க்க மேலும் அவர் கூறுகையில், வியாழனின் பெரிய சிவப்பு புள்ளி மற்றும் பட்டைகளை இன்னும் விரிவாகக் காண ஒரு பெரிய தொலைநோக்கியை கோபெல்ஸ்கி பரிந்துரைக்கிறார் - நான்கு அங்குலம் அல்லது பெரிய தொலைநோக்கி மற்றும் பச்சை முதல் நீலம் வரையிலான சில ஃபில்டர்கள் வியாழன் கிரகத்தை மிகவும் தெளிவாக காட்டும் எனவும் கூறியுள்ளார்.
பூமிக்கு அருகில் வரவுள்ள வியாழனுக்கு 53 பெயரிடப்பட்ட நிலவுகள் உள்ளன அதாவது துணைக் கோள்கள் உள்ளன. ஆனால் விஞ்ஞானிகள் மொத்தம் 79 கண்டறியப்பட்டதாக நம்புகிறார்கள். நான்கு பெரிய துணைக் கோள்கள் - அயோ, யூரோபா, கேனிமீட் மற்றும் காலிஸ்டோ - கலிலியன் செயற்கைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஆண்டுகளாக வியாழனைச் சுற்றி வரும் நாசாவின் ஜூனோ விண்கலம், கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் அதன் நிலவுகளை ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வியாழனை ஆய்வு செய்வதன் மூலம் சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பற்றிய திருப்புமுனை கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழன் கிரகமானது பல்வேறு வானிலை அமைப்புகளை கொண்டது. அதனால் அதன் மேற்பரப்பில், துணைக் கோள்கள், கோடுகள், மண்டலங்கள் மற்றும் பிற அம்சங்கள் காணும் வகையில் வரும் 26ம் தேதி பைனாகுலர் வழியாக பார்க்கும் போது அழகான காட்சி இருக்கப்போகிறது. Chandigarh: சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் வீடியோவை பகிர வேண்டாம்.. வேண்டுகோள் விடுத்த சோனுசூட்