(Source: Poll of Polls)
Disney Layoff : 4 ஆயிரம் பேருக்கு ’குட் பை’; மீண்டும் பணி நீக்கம் செய்ய திட்டமிடும் டிஸ்னி; அதிர்ச்சி தகவல்!
Disney Layoff: டிஸ்னி நிறுவனம் மேலும் நாலாயிரம் பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட துறை, பொழுதுபோக்கு ஆகியவற்றில் பிரபல நிறுவனமான டிஸ்னி மேலும் 4 ஆயிரம் பணியாளார்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் பல வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் டிஸ்னி நிறுவனம் வரும் ஏப்ரல் மாதத்தில் பணியாட்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நிறுவனமான டிஸ்னி, வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் வருடாந்திர ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக அறிவிப்பினை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் உள்ள மேலாளர்களிடம் யாரை பணியில் இருந்து நீக்கலாம் என்பது குறித்து லிஸ்ட் தயாரிக்குமாறும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி டிஸ்னி வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது.
இதோடு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தயாரிப்பதை குறைக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது.படி படியாக பணி நீக்கம் செய்ய போகிறதா, இல்லை மொத்தமாக 4 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்க போகிறதா என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகிவில்லை. டிஸ்னி நிறுவமும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மிகப் பெரிய தளமாக இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு டிஸ்னி சி.இ.ஓ வாக பாப் இகர் பதவியேற்றபின், எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவாகும். இதுகுறித்து டிஸ்னி சி.இ.ஓ பாப் இகர் தெரிவிக்கையில், “ நான் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்தார்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், ‘அந்த ஆண்டின் அக்டோபர் 2ம் தேதி வரை உலகளவில் 1 லட்சத்து 90 ஆயிரம் பணியமர்த்தினோம். அதில், 80 சதவீதம் பேர் முழு நேர பணியாளர்கள்” என்று தெரிவித்தனர். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக டிஸ்னியின் தாய் நிறுவனமான மாடி நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய இகர், கடந்த 2020 இல் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக இருந்த பாப் சாபெக் கொண்டு வரப்பட்டு, இயக்குநர்கள் குழு ஒரு சில காரணத்திற்காக பாப் சாபெக் வெளியேற்றிய பின்னர் மீண்டும் பாப் இகர் டிஸ்னி சி.இ.ஓ வாக கொண்டு வரப்பட்டார்.
டிஸ்னி ப்ள்ஸ் இன் சந்தாதாரர்கள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட கடந்த டிசம்பர் 31 அன்று ஒரு சதவீதம் குறைந்து 168.1 மில்லியன் வாடிக்கையாளர்களாக குறௌந்த ஊழியர்களின் பணி நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்திற்கு கீழ் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் வால்ட் டிஸ்னி நிறுவனம் 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த சூழலில், 5.5 அமெரிக்க டாலர்களை செலவை சேமிக்கும் வகையில் சுமார் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. விரைவில் 7 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை டிஸ்னி வெளியிட்டது. கொரோனா காலத்தில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் பணி நீக்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸ்விக்கி, மெட்டா,உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்திருந்தது.இப்போது டிஸ்னி நிறுவனம் 4 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.