woman eaten by cats: உயிரிழந்த உரிமையாளரை சாப்பிட்ட 20 வளர்ப்பு பூனைகள்! காரணம் இதுதான்!
வீட்டில் மைன் கூன் பூனைகளால் பாதி சாப்பிடப்பட்ட நிலையில் அந்த பெண் உயிரிழந்து கிடந்துள்ளார்.
![woman eaten by cats: உயிரிழந்த உரிமையாளரை சாப்பிட்ட 20 வளர்ப்பு பூனைகள்! காரணம் இதுதான்! Dead woman in Russia ‘eaten by her 20 cats while body undiscovered for weeks’ woman eaten by cats: உயிரிழந்த உரிமையாளரை சாப்பிட்ட 20 வளர்ப்பு பூனைகள்! காரணம் இதுதான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/21/dc523e2821a77957992b5baa7a02e568_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எந்த ஒரு உயிராக இருந்தாலும் சரி , இறுதியில் இந்த உலகத்தில் உயிருடன் வாழ வேண்டும் என்பதே அதன் அதிகபட்ச போராட்டமாக இருக்கும். உயிர் போகும் தருணத்தில் மனிதராக இருந்தாலும் சரி , புழு , பூச்சாக இருந்தாலும் சரி எந்தவொரு எத்திக்ஸும் பார்ப்பதில்லை. அப்படியான ஒரு சம்பவம்தான் ரஷ்யாவில் நடந்துள்ளது.
பூனை வளர்ப்பாளர்!
ரஷ்யாவில் உள்ள Bataysk என்னும் பிரபலமான பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் அங்கு கிட்டத்தட்ட 20 மைன் கூன் பூனையை வளர்த்து வந்திருக்கிறார். அந்த பெண் இரண்டு வாரங்கள் ஆகியும் அலுவலகம் செல்லவில்லை. தொலைபேசி அழைப்புகளையும் ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண்ணுடன் வேலை பார்த்த தோழி ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் . கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர்.
உரிமையாளரை சாப்பிட்ட பூனைகள் :
வீட்டில் மைன் கூன் பூனைகளால் பாதி சாப்பிடப்பட்ட நிலையில் அந்த பெண் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து ஆய்வு செய்த விலங்குகள் ஆய்வாளர்கள் , எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து உரிமையாளர் உயிரிழந்த நிலையில் , இரண்டு வாரமாக உணவுகள் இன்றி தனித்துவிடப்பட்ட பூனைகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். பூனைகளின் இந்த செயல் முற்றிலும் புரிந்துக்கொள்ளக்கூடியதுதான் என தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சில பூனைகள் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளது. சில வேறு உரிமையாளர்களிடம் சென்றுள்ளனர். ஆனால் அந்த உரிமையாளர்களுக்கு இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதா என தெரியவில்லை.
மற்றொரு சம்பவம்:
பூனை உரிமையாளர் இவ்வளவு கொடூரமான முறையில் இறப்பது இது முதல் முறை அல்ல. ஹாம்ப்ஷயர் பெண் ஒருவர், இரண்டு மாதங்கள் கழித்து தான் வளர்த்த பூனைகளால் உண்ணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அதே போல ஜேனட் வீல் என்னும் பெண்ணின் உடல் இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சமையலறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அந்த பெண்ணுடன் சில பூனைகள் இறந்த நிலையிலும் , சில உயிருடனும் மீட்கப்பட்டன. அவருடல் செல்லப்பிராணிகளால் பாதி உண்ணப்பட்டிருந்தது.
மைன் கூன் பூனைகள் :
மைன் கூன் பூனைகள் மேலைநாட்டவர்களால் அதிகம் வளர்க்கப்படும் பூனை இனம். அதிக ரோமங்களுடன் பார்ப்பதற்கே க்யூட்டாக இருக்கும் இந்த பூனைகளை கிட்டத்தட்ட $ 250 முதல் $ 1,500 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த பூனைகள் அன்பாக இருக்க கூடியவைதான் . ஆனால் அவை நடுத்தரமாகத்தான் இருக்கும். சில பூனைகள் குழந்தைகளுடன் மட்டுமே அன்பாக இருக்கின்றன. சில வன்முறை குணத்தோடும் , சிலர் வெட்கப்படும் குணத்தோடும் இருக்கின்றனர். இருந்தாலும் இது செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களிடம் அதிக வரவேற்பை பெறுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)