புதுமணத் தம்பதிகளுக்கு கொடுக்கப்படும் விலை உயர்ந்த பரிசு இதுதான்? இலங்கை பரிதாபம்!!
இலங்கையில் புதுமண தம்பதிகளுக்கு கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசு இதுதான்? என்னன்னு தெரியுமா?
திருமண பரிசு:
இருமனம் இணையும் வாழ்வின் முக்கிய நிகழ்வில் தம்பதியினருக்கு நெருங்கிய நண்பர்கள், உறவுகள் முக்கியமான தருணத்தில் திருமண பரிசாக கொடுப்பதற்கு பிறகு பெரும் திட்டமிடுதல் இருக்கும். இருவருக்கும் பிடித்த விஷ்யங்கள் என்ன? இருவரும் இருக்கும் ஃபோட்டோக்களை கொலாஜ் செய்து கொடுக்கலாமா? இப்படி பல கேள்விகள் இருக்கும். தங்கம், வைரம், கார், ஹனிமூன் டிரிப் செல்வதற்கான டிக்கெட், டிரிப் பேக்கேஜ் என பரிசாக கொடுப்பதற்கான தேர்வுகள் நிறைய இருக்கின்றன. இருவரும் இணைந்து புதிய வாழ்வை மகிழ்வுகடன் தொடங்க வேண்டும் என்று நோக்கில் மணநாளில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அப்படி, இலங்கையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் புதுமண தம்பதியர்களுக்கு மிக விலை உயர்ந்த பொருள் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்று தெரியும்போது வியப்பாக இருக்கலாம். நம் நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்றதாக நாம் செய்திகளில் வாசித்திருப்போம். ஆனால், கடும் பொருளாதார நெருக்கடையில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இந்த திருமண பரிசை பற்றி பேசி மக்கள் துன்பத்திலும் சற்று புன்னகைக்கும்படியான சூழல்.
விலை உயர்ந்த திருமண பரிசு:
இலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒரு திருமணத்தில் நண்பர்கள் இருவர், புதுமண தம்பதிகளுக்கு இரண்டு 5 லிட்டர் கேன்களில் பெட்ரோலை வழங்கியிருக்கிறார்கள். என்னாடா... இது.... நமக்கு இப்படியான பரிசு கிடைத்திருக்கிறதே என்று சிரிப்பதே இல்லை, பெட்ரோல், டீசல் தட்டுபாடு உள்ளிட்டவைகள் குறித்து அழுவதா என்று தெரியாமல் ஒரு இக்கட்டான சூழலில் அவர்கள் மாட்டிக்கொண்டார்கள். இருப்பினும், தங்கள் நண்பர்களின் நல்லெண்ணத்தை எண்ணி சிரித்தபடியே ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர் காதல் ஜோடிகள்.
எரிபொருள் தட்டுப்பாடு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மூலமாக அந்த நாட்டு மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் எரிபொருளுக்கு கூட அந்த நாட்டு மக்கள் அவதியுறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.420 ஆக உள்ளது. எதிர்வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய நிலவரப்படி, 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 10,000 மெட்ரிக் டன் பெட்ரோல் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள ஒரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 800 மெட்ரிக் டன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில் கடந்த வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 40% சதவீதம் உயர்ந்துள்ளது.