28 பயணிகள்.. தொடர்பில்லாமல் போன ரஷ்ய விமானம்..!
28 பயணிகளுடன் வானில் பறந்த ரஷ்ய விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது
ரஷ்யாவின் An-26 விமானம் 28 பயணிகளுடன் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ச்கில் இருந்து பலானாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும், அதன் தொடர்பு தகவல்கள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ரஷ்யா விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி-130 போர் விமானம் நேற்று முன் தினம் விபத்துக்குள்ளானது. விபத்தின்போது விமானத்தில் 90க்கும் அதிகமானோர் இருந்தனர். இந்த விபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்புப் பணிகளில் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவத் தலைவர் தெரிவித்தார். விமான ஓடுபாதையில் இருந்து காணாமல்போன பிறகு, சுலு மாகாணம் மலைப்பகுதியில் உள்ள படிக்குள் (Patikul) என்ற கிராமத்தில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. பத்திரமாக மீட்கப்பட்ட அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.