மேலும் அறிய

"மேக்கப் போட்டுட்டு வாங்க" ஆண் ஊழியர்களை ஊக்கப்படுத்த பெண் ஊழியர்களுக்கு ஆர்டர் போட்ட சீன நிறுவனம்!

ஆண் ஊழியர்களை ஊக்கப்படுத்த, பெண் ஊழியர்கள் மேக்கப் போட்டுக் கொண்டு அலுவகத்திற்கு வர வேண்டும் என்று சீன நிறுவனம் ஒன்று தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆணுக்கு நிகர் பெண் என்பதை காலங்காலமாக சொல்லி வருகிறோம். ஆனால், உண்மையிலேயே ஆணுக்கு நிகராக பெண்கள் போற்றப்படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெயரளவிற்கும் அலங்கார வார்த்தைக்காகவுமே சொல்லப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. 

சர்ச்சையை கிளப்பிய சீன நிறுவனம்:

சமீபத்தில் கூட வெளியான ஒரு ஆய்வில், 10-ல் 9 ஆண்கள் பெண்களுக்கு எதிராக ஏதேனும் ஒருவகையிலான பாலின பாகுபாட்டை காட்டுகின்றனர் என்பது தெரியவந்தது.  உலகளவில் ஒட்டுமொத்தமாக ஆண், பெண் முழு சமநிலையை அடைய 131 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சீன நிறுவனம் ஒன்று, ஆண் ஊழியர்களை  ஊக்குவிப்பதற்காக பெண் ஊழியர்கள் மேக்கப் போட்டு கொள்ள வேண்டும் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தென்கிழக்கு சீனாவின் ஷென்சென் நகரை தளமாகக் கொண்ட சீன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தில் லுவோ  என்பவர் நிர்வாக அதிகாரியாக உள்ளார்.  

"மேக்கப் போட்டு கொண்டு வாருங்கள்”

இவர் அலுவலக குழுவினர் சக ஊழியர்களிடம் சாட் செய்து கொண்டிருந்தார்.  அந்த குழுவில் ஐந்து பெண் ஊழியர்களும் இருந்துள்ளனர்.  அந்த நேரத்தில், நிர்வாக அதிகாரியான லுவோ, "பெண்கள் அலுவலகத்திற்கு வரும்போது அழகுசாதன பொருட்களை அணிய வேண்டும். அதாவது, ஆண் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு அலுவகத்திற்கு வர வேண்டும்" என்றார். 

”மேக்கப் போட்டுக் கொண்டு ஆண் ஊழியர்களை ஊக்குவித்தால், அவர்கள் வெகுமதியாக தேநீர் வாங்கி கொடுப்பார்கள்" என்று கூறியதாக தெரிகிறது.  இதனை அந்த குரூபில் இருந்த ஒருவர் இணையத்தில் பகிர்ந்ததை அடுத்து, வைரலானது.  இதற்கு பதலளித்த நிர்வாக அதிகாரி, நகைச்சுவைக்காக சொன்னதாக அவர் கூறினார். மேலும், பெண் ஊழியர்களுக்காக எங்கள் நிறுவனம் பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது என்றும் கூறினார். இருப்பினும், சீன நிறுவனத்தின் அதிகாரி கூறிய இந்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். ”பெண் ஊழியர்களை இப்படி தான் நடத்துவதா? இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று ஒருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.  ”அணியை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி செய்ய ஆண் ஊழியர்களை அவர் ஏன் கேட்கவில்லை?" என்று  மற்றொருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.  

மேலும் படிக்க

Sonia Gandhi: ராமர் கோயில் திறப்பு விழா.. காங்கிரஸ் எடுத்த நிலைபாடு.. சோனியா காந்தி அதிர்ச்சி முடிவு

Vijayakanth Funeral LIVE: விஜயகாந்த் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் முதலமைச்சர்.. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget