ஒரே கல்லில் இரண்டு மாங்கா... இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் செக்...பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய சீனா
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான அப்துல் ரெஹ்மானை உலக பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்தது.
![ஒரே கல்லில் இரண்டு மாங்கா... இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் செக்...பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய சீனா China Blocks US India Move To List Pakistani Terrorist In United Nations ஒரே கல்லில் இரண்டு மாங்கா... இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் செக்...பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய சீனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/11/a92e0650984d4204581d7ff4cc740821_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான அப்துல் ரெஹ்மானை உலக பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத வகையில் சீனா கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியது.
பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரெஹ்மான் மக்கி, அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதி ஆவார். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரும் 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபிஸ் சையத்தின் சகோதர்தான் ரெஹ்மான் மக்கி. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா தடைக் குழுவின் கீழ் மக்கியை உலக பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மற்றும் அமெரிக்க ஒன்றாக தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் சீனா இதை தடுத்து நிறுத்தியது.
முன்னதாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்கும் வகையில் இந்தியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சீனா தடுத்து நிறுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, மே மாதம், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவருமான மசூத் அசாரை உலக பயங்கரவாதியாக ஐநா அறிவித்தது. இது இந்தியாவின் தூதரக ரீதியான வெற்றியாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே இதுதொடர்பாக ஐநாவை இந்திய அணுகி இருந்தது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இதற்கிடையே, அசாரை உலக பயங்கரவாதியாக அறிவிக்க கொண்டு வந்த தீர்மானத்தை சீன பல முறை தடுத்து நிறுத்தியது. 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாக இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்திய ஒரே நாடு சீனாவாகும். கவுன்சின் அனைத்து முடிவுகளும் ஒரு மனதாகவே எடுக்கப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு, இந்தியா தனியாகவும் 2016ஆம் ஆண்டு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்தும் தீர்மானத்தை கொண்டு வந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு, பதான்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அசாரே மூளையாக செயல்பட்டார்.
கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மக்கியை உலக பயங்கரவாதிகளின் சிறப்பு பட்டியலில் அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் சேர்த்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)