Crime: கொடூரமான வெறிச்செயல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை - என்னதான் நடந்தது?
தென்னாப்பிரிக்காவில் ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், 7 பெண்களும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்காவில் ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், 7 பெண்களும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு போலீசாருடனான துப்பாக்கிச் சூட்டில் சந்தேகத்திற்குரிய ஆண் ஒருவர் கொல்லப்பட்தோடு இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நான்காவது சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார், ஆனால் அவரது அடையாளம் அறியப்பட்டுள்ளது. அவரைத் தேடி வருவதாக காவல்துறை அமைச்சர் பெக்கி செலே கூறினார்.
துப்பாக்கிச்சூடு:
முதற்கட்ட தகவல்களின்படி, தென்னாப்பிரிக்காவின் கிழக்கு குவாசுலு-நடால் மாகாணத்தில் உள்ள பீட்டர்மரிட்ஸ்பர்க் நகரில் உள்ள வீட்டில் துப்பாக்கி ஏந்தியவர்களால் குடும்பத்தினர் பிடித்துவைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஏழு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என்று போலீசார் முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் இறந்தவர்களில் குறைந்தது 13 வயதுடைய குழந்தை ஒன்று இருந்தது என்று சம்பவ இடத்தில் இருந்த செலே கூறினார். இவ்வெகுஜன துப்பாக்கிச் சூட்டில், 65 வயதானவர் ஒருவரும் பலியானவர் என்று செலே கூறினார். கொல்லப்பட்ட இளைஞரின் பாலினத்தை அவர் உறுதிப்படுத்தவில்லை. மற்ற பாதிக்கப்பட்டவர்களின் வயது குறித்த வேறு விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
கொடூர கொலை:
மேலும் சம்பவ இடத்தில் இருந்த செலே, துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள தெருவில் போலீசார் யாரோ நான்கு பேரை கண்டு விவரம் அறிந்ததாகவும் கூறினார். அந்நபர்கள் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறினார்.
“காவல்துறையினர் திருப்பிச் சுட்டனர். இதில், ஒருவர் கொல்லப்பட்டார், ஒருவர் காயமடைந்த பின் கைது செய்யப்பட்டார், மேலும் ஒருவர் காயமின்றி கைது செய்யப்பட்டார். மீதமிருந்த ஒருவர் தப்பிவிட்டார்" என செலே கூறினார். "அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடியவரின் அடையாளத்தை போலீசார் அறிவர்" என்றும் கூறினார். கொலையாளிகளில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவர் வேறு பல வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் செலே கூறினார். இது ஒரு கொடூரமான சம்பவம் என்றும் செலே கூறினார்.
தென் ஆப்பிரிக்காவில் இதுபோன்ற குடும்பத்திற்குள் நடக்கும் படுகொலைகள் உலகிலேயே அதிகமாக நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போக்கு இன்னும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் கெபேரா எனும் நகரில் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஜோகனஸ்பர்கில் சொவேடோ எனும் நகரில் ஒரு பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வாடிக்கையாளர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்.