Aleida Guevara: மனித உரிமைகளுக்காக போராட வேண்டும்... அனைவரும் ஒன்றிணைவோம்..தமிழ்நாட்டில் கர்ஜித்த சேகுவரா மகள்..!
வெற்றியை அடையும் வரை போராடி கொண்டே இருக்க வேண்டும் என சேகுவராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார்.
கியூபா புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய ஒருமைப்பாட்டு குழு சார்பில் இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய சேகுவராவின் மகள் அலெய்டா, நான் சேகுவராவின் மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் கொண்டுள்ள அன்பிற்கு நன்றி. வெற்றி கிடைக்கும் வரை நாம் போராடி கொண்டே இருக்க வேண்டும்.
போராளியான சேகுவராவின் மகளாக இருந்தால் மட்டும் போதாது, மக்களின் உரிமைக்காக போராட வேண்டும். அத்தகைய வழியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றி கிடைக்கும் வரை ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அலெய்டா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கனிமொழி எம்.பி, திருமாவளவன் எம்.பி, வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.