Watch Video: ’நோ’ சொல்லும் செல்லப்பூனை.... பூனைகளின் தாயாக வலம் வரும் பெண்... குறும்பான இன்ஸ்டா பக்கம்!
சேஸ் எனும் குறிப்பிட்ட பூனை ‘நோ’, ‘மாம்’ ஆகிய வார்த்தைகளை சொல்வது போல் கத்துவது பலரையும் ஈர்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.
சமூக வலைதளங்கள் மனிதர்கள் ஆடல், பாடல் தொடங்கி சாகசங்கள் வரை உருண்டு புரண்டு தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கிறார்கள்.
ஆனால் இது போன்ற எந்தவித ஆர்ப்பாட்டங்களும் மெனக்கெடல்களும் இன்றி தங்கள் இயல்பால், சின்ன சின்ன க்யூட்டான சைகைகளால் வளர்ப்புப்பிராணிகள் மனிதர்களை தூக்கி சாப்பிட்டு ஹிட் அடித்து விடுகின்றன.
அந்த வகையில் முன்னதாக தனக்கு ஆடை, விக் அணிவித்து அழகு பார்க்கும் உரிமையாளரிடம் பூனை ஒன்று ’நோ’ சொல்லும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.
View this post on Instagram
மொத்தம் மூன்று பூனைகளை வளர்க்கும் இப்பெண் dont stop neowing எனும் இப்பக்கத்தில் தன் செல்ல பூனைகளின் அனைத்து குறும்பான நடவடிக்கைகளையும் வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார்.
உலகம் முழுவதும் உள்ள கேட் பேரண்ட்ஸ், கேட் லவ்வர்ஸை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது இந்தப் பக்கம்.
View this post on Instagram
குறிப்பாக 'சேஸ்’ எனும் பூனை ‘நோ’, ‘மாம்’ எனக் குறிப்பிட்ட வார்த்தைகளை சொல்வது போல் கத்துவது பலரையும் ஈர்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.