பாலின மாற்றுக்கு எதிரான கன்வெர்ஷன் தெரபி - கனடாவில் நிரந்தரத் தடை!
பாலினத்தை மாற்றிக்கொள்ள விரும்பும் நபரை அவரது சுயவிருப்பத்துக்கு எதிராக அவரது எண்ணத்தை மாற்ற முயற்சிப்பதற்கு கன்வர்ஷன் தெரபி
கனடா நாட்டில் பாலின மாற்றுக்கு எதிரான கன்வர்ஷன் தெரபிக்கு முற்றிலுமாகத் தடை விதித்து அதற்கு எதிரான சட்ட மசோதா அந்த நாட்டின் மக்கள் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆளும் லிபரல் கட்சி இந்த மசோதாவை நிறைவேற்றிய நிலையில் எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற மேல்சபையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மக்கள் சபையின் சபாநாயகர் லூகாஸ் மேயர் இந்த மசோதாவை நிறைவேற்றியதும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர்.
View this post on Instagram
தனது பாலினத்தை மாற்றிக்கொள்ள விரும்பும் நபரை அவரது சுயவிருப்பத்துக்கு எதிராக அவரது எண்ணத்தை மாற்ற முயற்சிப்பதற்கு கன்வர்ஷன் தெரபி எனப்பெயர். தற்போது இதற்கு எதிராகத் தடை விதித்துள்ளது கனடா நாடாளுமன்ற மசோதா.
இந்த மசோதா குறித்து கருத்து கூறியுள்ள அதிபர் ஜஸ்டின் ட்ரிடியூவின் செயலாளர் ‘யாரும் சித்தரவதைக்கு உள்ளாவதை விரும்பமாட்டார்கள் அதனால்தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது’ எனக் கருத்து கூறியுள்ளார்.
தற்போது மேலவையின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலையில் விரைவில் இந்த மசோதா சட்டமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் கடந்த ஒருவருடமாக இந்த மசோதாவுக்காக கனடா நாடாளுமன்றமும் பல்வேறு செயல்பாட்டாளர்களும் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram