கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ... வெளியேறும் 6 ஆயிரம் அமெரிக்கர்கள்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவி வரும் காட்டுத்தீயால் 6,000 மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவி வரும் காட்டுத்தீயால் 6,000 மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் சியரா நெவாடா என்ற மலைத்தொடர் பகுதியின் மலையடிவாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று லேசாக காட்டுத்தீ பரவத் தொடங்கியது. பின்னர், கட்டுக்குள் கொண்டு வர முடியாத அளவிற்கு பெரிதாக உருவெடுத்த இந்த காட்டுத்தீ, நேற்று கலிபோர்னியாவின் மிட் பைன்ஸ் என்ற பகுதியை நோக்கி வேகமாக பரவத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் இந்த நிலைமையை சரி செய்ய இயலவில்லை. இதையடுத்து அப்பகுதியில், மாலை நான்கு மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் மக்கள் அனைவரையும் விரைவில் வெளியேறும்படி கூறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இதையொட்டி, கலிபோர்னியாவின் கவர்னர் கேவின் நியூசம், அப்பகுதியில் அவசர நிலையை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர இந்த அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள கலிபோர்னியா வனவியல் மற்றும் தீயணைப்பு துறை, இந்த அதி பயங்கர காட்டுத்தீயால் இதுவரை பதினைந்திற்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாகவும், இன்னும் இரண்டாயிரம் கட்டமைப்புகள் தீயில் எரியும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Also Read|கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பு... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மஸ்க்?
மேலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பன்னிரண்டு குழுக்களைக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கலிபோர்னியாவின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. வெப்பசலனம் காரணமாக கலிபோர்னியா உட்பட பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஆனால், ஓக் ஃபையர் என சொல்லப்படும் இந்த காட்டுத்தீ தான் இவ்வருடத்தின் மிகப்பெரிய காட்டுத்தீ என்று கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், புள்டோஸர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் பரவி வரும் காட்டுத்தீயை தடுக்க போராடி வருகின்றனர்.
இந்தக் காட்டுத்தீயால் சுமார் 14,000 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசாமாகியுள்ளது. கலிபோர்னியாவில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசிய பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை பரவத் தொடங்கிய இந்த காட்டுத்தீ தொடர்ந்து மூன்று நாட்களாக அப்பகுதிகளில் பரவி, பயங்கர காட்டுத்தீயாக உருவெடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து பரவி வரும் இந்த அதிபயங்கர காட்டுத்தீ, அமெரிக்காவின் யோசெமிட்டி தேசிய பூங்காவை நெருங்கி வருகிறது. இந்த பூங்காவில் உலகின் மிகப் பழைமையான பெரிய பெரிய மரங்கள் உள்ளதால் இப்பகுதியில் காட்டுத்தீ, எளிதில் ஊடுருவும் அபாயம் உள்ளது.
இப்படி உலகை அச்சுருத்தும் வகையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காட்டுத்தீ சம்பவங்களால், கலிபோர்னியாவில் மட்டும் 2.5 மில்லியன் ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.