கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பு... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மஸ்க்?
கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் சிறிது காலம் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் சிறிது காலம் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரின் மற்றும் ஷனஹான் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததற்கு மஸ்குடன் அவர் உறவில் இருந்தது ஒரு காரணம் என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது.
ஷானாஹன், மஸ்க் ஆகியோரின் உறவு காரணமாக காரணமாக கோடீஸ்வரர்களான மஸ்க், செர்ஜி பிரின் ஆகிய இருவரும் தங்கள் நட்பை முடித்துக்கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, 2022ஆம் ஆண்டில், பிரின் முன் மஸ்க் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் ஷனஹானுடன் உறவில் இருந்ததற்காக மன்னிப்பு கேட்டு கெஞ்சியதாகவும் விவரம் அறிந்தவர்கள் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
மஸ்கின் மன்னிப்பை பிரின் ஏற்று கொண்டதாகவும் ஆனால், மஸ்குடன் அவர் வழக்கம் போல் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
பிரின் மற்றும் மஸ்க் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். முன்னதாக, பிரின் வீட்டிற்கு தான் பல முறை சென்றிருப்பதாக மஸ்க் கூறியிருந்தார். 2008 நிதி நெருக்கடியின் போது டெஸ்லாவிற்கு சுமார் 500,000 அமெரிக்க டாலர்களை பிரின் வழங்கியுள்ளார். மஸ்கின் நிறுவனம் மின்சார கார் தயாரிப்பு உற்பத்தியை அதிகரிக்க சிரமப்பட்டபோது பிரின் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
2015ஆம் ஆண்டில் டெஸ்லாவின் முதல் முழு மின்சார விளையாட்டு-பயன்பாட்டு வாகனங்களில் ஒன்றை பிரின்னுக்கு மஸ்க் பரிசளித்தார். மஸ்க்கிற்குச் சொந்தமான நிறுவனங்களில் தனது தனிப்பட்ட முதலீடுகளை விற்குமாறு பிரின் தனது நிதி ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டார். எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு விற்கபட்டுள்ளது என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.
ட்விட்டர் வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து மஸ்க் பின்வாங்க விருப்பம் தெரிவித்ததிலிருந்து அவரின் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஸ்பேஸ்எக்ஸில் விமானப் பணிப்பெண்ணிடம் மஸ்க் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
மஸ்கின் 10 குழந்தைகளில் ஒருவர், அவரிடமிருந்து வெளிப்படையாக விலகி வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் நியூராலிங்கில் பணிபுரிந்த ஒரு பெண் நிர்வாகியுடன் ஒரு குழந்தையை பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது. நியூராலிங்க் என்பது எலான் மஸ்க்கின் மற்றுமொரு இணை நிறுவனமாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்