மேலும் அறிய

இரண்டு தலைகள்.. பன்றி உடல்..பிறழ்வு குறைபாட்டுடன் பிறந்த கன்றுக்குட்டி மரணம்.. சோகத்தில் குடும்பம்..

2 தலைகளுடன் பன்றிக்குட்டிபோல் இருந்த கன்றுக்குட்டி மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசு மாடுகள் கன்றுக்குட்டியை ஈன்று போதும் அவை சற்று வித்தியாசமாக பிறந்தால் அது பலருக்கும் ஆச்சரியத்தை தரும். அந்தவகையில் ரஷ்யாவில் ஒரு இடத்தில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. எனினும் கெடுவாய்ப்பாக அந்த கன்றுக்குட்டி மற்றும் பசு மாடு ஆகிய இரண்டும் திடீரென உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவின் காகசியா பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் பசு மாடு அண்மையில் ஒரு கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு தலை இருந்துள்ளது. ஆனால் அது பார்ப்பதற்கு கன்றுக்குட்டி போல் இல்லாமல் பன்றிக் குட்டியை போல் தோற்றத்துடன் இருந்துள்ளது. இந்த பிரசவம் குறித்து அந்த விவசாயி கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் மரபணுவை எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். 

அந்த முடிவுகள் வருவதற்கு முன்பாக அந்த கன்றுக்குட்டி இறந்துள்ளது. அத்துடன் பசு மாடும் இறந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்த விவசாயியை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில் அந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி கால்நடை மருத்துவர் ஒருவர், “இந்த கன்றுக்குட்டி தொடர்பாக அதன் உரிமையாளர் வந்து கூறிய போது நாங்கள் அதை பார்த்தோம். அது அந்த பசு ஈன்ற முதல் கன்றுக்குட்டி. அந்த கன்றுக்குட்டியை பார்த்தவுடன் அதில் சில மரபணு கோளாறு இருப்பதாக நாங்கள் சந்தேகித்தோம்.

இரண்டு தலைகள்.. பன்றி உடல்..பிறழ்வு குறைபாட்டுடன் பிறந்த கன்றுக்குட்டி மரணம்.. சோகத்தில் குடும்பம்..

அதைத் தொடர்ந்து அந்த கன்றுக்குட்டியின் மரபணுவை எடுத்து சோதனை செய்துபோது அது உறுதியானது. இங்கு ஏற்பட்டுள்ள சூழல் மாற்றத்தால் அந்த கன்றுக்குட்டியின் மரபணுவில் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அது சற்று கோளாறுடன் பிறந்துள்ளது. அத்துடன் அது சரியாக பிரசவம் அடைந்து பிறக்கவில்லை. எனவே அது உயிர்வாழ்வது கடினம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதேபோல் அந்த கன்றுக்குட்டி இறந்து விட்டது” எனக் தனது சோகத்தைக் கூறியுள்ளார். அடுத்தடுத்து தன்னுடைய பசுவும் அது ஈன்ற கன்றுக்குட்டியும் மரணம் அடைந்துள்ளதால் அந்த விவசாயி பெரும் சோகத்தில் உள்ளார். 

இதுபோன்று வித்தியாசமாக கன்றுக்குட்டி ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவிலும் பிறந்து இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் தொல்பூர் மாவட்டத்தின் புரா சிக்ரவுடா கிராமத்தில் ஒரு கன்றுக்குட்டி 2 கழுத்து, 4 கண்கள், 4 காதுகள் மற்றும் 2 வாயுடன் பிறந்தது. இந்தக் கன்றுக்குட்டியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது என்று கூறினர். அதேபோல் அந்த கன்றுக்குட்டி எந்தவித சிக்கலும் இல்லாமல் தற்போது வரை நன்றாக வளர்ந்து வருகிறது. 

மேலும் படிக்க: ஹிந்து மதத்துக்கு மாறினார், முதல் இந்தோனேசிய அதிபரின் மகள்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Embed widget