Bangladesh: குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 17 பேர் உயிரிழப்பு - வங்கதேசத்தில் சோகம்!
Bangladesh: வங்கதேசம் அருகே ஜலகதி சதர் உபாசிலா பகுதியில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 35 காயமடைந்துள்ளனர்.
வங்கதேசம் அருகே ஜலகதி சதர் உபாசிலா பகுதியில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 35 காயமடைந்துள்ளனர்.
பந்தாரியா உபாசிலா பகுதியிலிருந்து பேருந்து ஒன்று பிரோபூர் பகுதிக்கு பயணிகளை ஏற்ற்க்கொண்டு சென்றது. அந்த பேருந்து, சத்திரகந்தா அருகே சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த குளத்தில் எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 7 சிறுவர்களும் 5 பெண்களும் அடங்குவர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அரிஷால் பிரதேச ஆணையர் எம்டி ஷவ்கத் அலி தெரிவித்துள்ளார்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.