தாத்தா வாங்கிச்சென்ற புத்தகம்..! 84 ஆண்டுகளுக்கு பிறகு நூலகத்தில் ஒப்படைத்த பேரன்...! அமெரிக்காவில் சுவாரஸ்யம்
Book Returned: அமெரிக்காவில் 84 ஆண்டுகளுக்கு பிறகு தாத்தா வாங்கிய புத்தகத்தை நூலகத்தில், அவருது பேரன் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![தாத்தா வாங்கிச்சென்ற புத்தகம்..! 84 ஆண்டுகளுக்கு பிறகு நூலகத்தில் ஒப்படைத்த பேரன்...! அமெரிக்காவில் சுவாரஸ்யம் Book Returned to library after 84 years by grandson in america தாத்தா வாங்கிச்சென்ற புத்தகம்..! 84 ஆண்டுகளுக்கு பிறகு நூலகத்தில் ஒப்படைத்த பேரன்...! அமெரிக்காவில் சுவாரஸ்யம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/29/16ad7eee684237ebba07abc8a35a3ae41667037511161571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Book Returned: அமெரிக்காவில் தாத்தா வாங்கிச் சென்ற புத்தகத்தை 84 ஆண்டுகளுக்கு பிறகு நூலகத்தில், அவரது பேரன் ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் அனைவருக்கும் மறதி என்பது ஒரு இயல்பான குணம். குடும்ப சூழல், வேலை, அலுவலகம் போன்ற இத்தகைய சூழல்களில் மறதி என்பது இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் வருவது இயல்பு தான். அதுபோல தான் தற்போது சமூக வலைதளத்தில் ஒரு சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
1938 ஆம் ஆண்டு கோவென்ட்ரியில் உள்ள ஏர்ல்ஸ்டன் நூலகத்திலிருந்து ரிச்சர்ட் ஜெஃப்ரிஸ் எழுதிய ’ரெட் டீரின்’ புத்தகத்தை வில்லியம் ஹம்ப்ரிஸ் என்பவர் வாங்கினார். அவர் வாங்கிய அந்த புத்தகம் அதே ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதிக்குள் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கால அவகாசம் இருக்கிறது. இந்த புத்தகத்தை கொடுக்க வில்லியம் ஹம்ப்ரிஸ் மறந்து விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் வீட்டிலேயே இந்த புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாகவே அந்த புத்தகம் அவரது வீட்டில் தான் இருந்தது என கூறப்படுகிறது.
View this post on Instagram
அவரது பேரன் ரியோர்டன் பிளிட்ஸில் ஆவார். கடந்த 25ஆம் தேதி வீட்டை சுத்தம் செய்யும்போது அவரது தாத்தா 1938 ஆம் ஆண்டு நூலகத்தில் இருந்து வாங்கிய புத்தகம் அவர் கண்ணில் தென்பட்டது. தனது தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய புத்தகத்தை திருப்பிக் கொடுத்தார். இது அந்த நூலகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)