செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ள முடிவு..
2021 செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்ள பைடன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
2021 செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கி கொள்ள பைடன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் 20 ஆண்டு நினைவு நாளை குறிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தோஹாவில் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட ஒப்பந்தத்தில், "பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் மற்றும் வெளிநாட்டு படைகள் 14 மாதங்களுக்குள் (2021 மே 1-ஆம் தேதிக்குள்) விலக்கி கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
ஐ.நாவின் பாதுகாப்பு குழு ஆப்கானிஸ்தான் அரசு உடனடியாக அங்கு அமைதியை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்த ஒப்பந்தத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பைடன் நிர்வாகத்தின் தற்போதைய முடிவால் இறுதி நாளாக கருதப்பட்ட மே 1-ஆம் தேதிக்குப் பிறகும் ஆயிரக்கணக்கான அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்தாண்டு, அமெரிக்காவுக்கும், தாலிபான் அமைப்புக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்று பேசியது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு.ரவீஷ்குமார் இதுகுறித்து கூறுகையில், "ஆப்கானிஸ்தானின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும். ஆப்கானிஸ்தான் தலைமையில் ஆப்கானிஸ்தானுக்கு உரித்தான ஆப்கானிஸ்தானால் கட்டுப்படுத்தப்படும் நடைமுறைகள் மூலம் வன்முறைக்கு முடிவுக்கட்டி சர்வதேச பயங்கரவாதத்துடனான தொடர்புகளை துண்டித்து, நீண்டதொரு அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் " என்று தெரிவித்தார்.