ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
ஜஃப்லாங் பார்டரில் உள்ள சுற்றுலா தலத்திற்கு இரு நாடுகளை சேர்ந்தவர்களும் விசா இல்லாமல் வந்து விடுமுறையை ஜாலியாக கொண்டாடலாம்.
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது வங்கதேச சுற்றுலாப் பயணிகள் கற்களை வீசுவது போன்ற வீடியோ பரவி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த அதிர்ச்சிக்குள்ளான வீடியோவால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஜஃப்லாங் பார்டர் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த சுற்றுலா தலத்திற்கு இரு நாடுகளை சேர்ந்தவர்களும் விசா இல்லாமல் வந்து விடுமுறையை ஜாலியாக கொண்டாடலாம். இச்சம்பவத்திற்கு முன்பு வரை இரு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் நட்புடன் சுற்றுலா தலத்தில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வந்த நிலையில், தற்போதைய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Bangladeshi tourists throwing stones at Indian tourists at India-Bangladesh Jaflong border
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 20, 2024
pic.twitter.com/mQAxUqIvdb
வைரலான வீடியோவில் வங்கதேச சுற்றுலா பயணிகள் சிலர் கற்களை வீசி இந்திய சுற்றுலா பயணிகளை தாக்குவது வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கலாம். மேலும், சுற்றுலா தலத்திற்கு பயணிகள் வர கூட தடை விதிக்கலாம்.
இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டனத்திற்கு உரியது என்று கூறி, குற்றவாளிகள் மீது வங்கதேச அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா பயணத்தை பாதிக்கலாம் என்றும் நெட்டிசன்கள் அஞ்சுகின்றனர்.