Watch Video: என்ன நடந்தாலும் அசராமல் தூங்கும் தாய்.... வைரலான சேட்டை குழந்தை வீடியோ.. நெட்டிசன்கள் காரசார வாதம்!
தன் அன்றாட வேலை முடிந்து டயர்டாக தூங்கும் தாயின் மீது 360 டிகிரியில் விழித்தபடியும் தூங்கியபடியும் இரவில் வட்டமிட்டு சேட்டை செய்யும் குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பெண்களின் வாழ்வில் கருவுறுதல் தொடங்கி குழந்தைப் பேறு வரையிலான காலக்கட்டம் தான் சவாலான, கடினமான பகுதியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் பிறந்தது முதல் துறுதுறுவென சுற்றுவது வரை முதல் சில ஆண்டுகள் அவர்களை கண்காணித்து வளர்ப்பதே பெண்களுக்கு சவாலான காலக்கட்டம்!
வேலை, தூக்கம் என பல முக்கிய விஷயங்களை குழந்தைப் பேறு காலத்தில் பெண்கள் ஒருபுறம் இழந்தாலும், குழந்தைகள் செய்யும் குட்டி குட்டி சேட்டைகள், துறு துறு செய்கைகள் இவற்றை பெரும்பாலும் மறக்கடித்து, குழந்தை வளர்ப்பை கொண்டாட்டமானதாக்கி விடும்.
அந்த வகையில், தன் அன்றாட வேலை முடிந்து டயர்டாக தூங்கும் தாயின் மீது 360 டிகிரியில் விழித்தபடியும் தூங்கியபடியும் இரவில் வட்டமிட்டு சேட்டை செய்யும் குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Moms have nerves of steel! Moms ❤️🤣
— Tansu YEĞEN (@TansuYegen) October 1, 2022
pic.twitter.com/Acep3cIIDC
வேலை முடிந்து அலுப்பில் கொஞ்சமும் அசையாமல் இந்தத் தாய் தூங்கும் நிலையில், குழந்தையோ குட்டி குட்டி தூக்கமெடுத்து இடையிடையே கண் முழித்து தாய் மீது ஏறி, இறங்கி சேட்டை செய்கிறது.
பேபி மானிட்டரில் பதிவான குழந்தையின் இந்த வீடியோ காண்போருக்கு குபீர் சிரிப்பை வரவழைத்து ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
My child has ASD and hyper active at night. I was even dragged to sit when she wanted a playmate. I was unable to watch her last night due to exhaustion ending up seeing our walls with crayons and colored pens around her lips and eyes and thighs.. keep on moms... well get there
— June Francisco-Echin (@sykman7915) October 1, 2022
ஆனாலும், வெளிநாடு வாழ் மக்கள் இவ்வளவு வளர்ந்த குழந்தையோடு தூங்குவது தவறான செயல் என்றும், தூக்கமின்றி தவிக்கும் குழந்தையை பார்ப்பதற்கு கவலையாக இருக்கிறது என்றும், ஒரு தாயால் எந்த மாதிரியான சூழலிலும் சுற்றி இருப்போரை மறந்து இப்படி தூங்க முடியும் என்றும் கலவையான விமர்சனங்களைப் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.
Her child is way too old to be in the same bed. I didn’t sleep with my parents in the 60s and my daughter never slept with my wife and me in the 90s.
— David George (@davidleegeorge) October 1, 2022
I don’t understand this. This was not even a thing when I was growing up. Kids slept in cribs or their own bed, end of story. This is really sad to watch!
— Dina Neumann (@dina5135) October 1, 2022
மேலும் குழந்தை வளர்ப்பில் ஆண்களும் உதவ வேண்டும், இந்தப் பெண்ணின் கணவன் எங்கே, யாராவது அலுப்பாக தூங்கும் பெண்ணுக்கு குழந்தையை பார்த்துக் கொள்ள உதவுங்கள் என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.