French Fries In Space: அட இனி விண்வெளியில் பிரஞ்சு ஃபிரைஸ் சமைக்க முடியும்.. எப்படி தெரியுமா? ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அசத்தலான கண்டுபிடிப்பு..
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய டீப் ஃபிரையர் மூலம் விண்வெளி வீரர்கள் விரைவில் விண்வெளியில் பிரஞ்சு ஃப்ரைஸ் சமைக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
இனி விண்வெளி விரர்களுக்கான உணவு பட்டியலில் பிரெஞ்சு ஃப்ரைஸ் புதிதாக சேர்க்கப்படும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய டீப் ஃபிரையர் மூலம் விண்வெளி வீரர்கள் விரைவில் விண்வெளியில் பிரஞ்சு ஃப்ரைஸ் சமைக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
🍳 What a better way to start your Sunday than with a fry-up?
— ESA (@esa) June 4, 2023
But have you ever tried frying in zero-g?
As we prepare for missions to the #Moon and on to Mars, you will be happy to hear that one staple comfort food, fries, is not out of reach 🍟
🔗 https://t.co/h55cTMO36w pic.twitter.com/ukK4NWXTzT
விண்வெளி வீரர்கள் பிரஞ்சு ஃபிரைய்ஸ் சாப்பிட வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் ஆசையாகும், இப்போது வரை, இது சாத்தியமாகவில்லை. பூமியில் பிரஞ்சு ஃபிரைய்ஸ் சமைக்க இரண்டு நிமிடங்கள் போதுமானது. ஆனால் விண்வெளியில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. உண்மையில், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இதற்காக விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியது. மைக்ரோ கிராவிட்டியை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படும் ஒரு டீப் ஃபிரயரை கண்டுபிடிக்க திட்டமிட்டது.
இதுவரை விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு வகையான தொகுக்கப்பட்ட உணவுகள் (packaged foods) வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கருவியால் இந்த உணவு பட்டியல் முற்றிலும் மாறும் என நம்பப்படுகிறது. விண்வெளி சூழலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள deep fryer இன்னும் விண்வெளியில் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த சோதனை மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் விரைவில் இந்த ஃபிரையரை விண்வெளிக்கு அனுப்பி எவ்வாறு வேலை செய்கிறது என சோதிக்கப்படும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய மைக்ரோ கிராவிட்டியை பயன்படுத்தி டீப் ஃபிரையரில் வெவ்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெறப்பட்ட தரவு எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களின் உணவை விரிவுபடுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்டுள்ள ஃபிரையர் முற்றிலும் சீல் செய்யப்பட்டதாகும். எண்ணெய் வெளியேறும் போது விண்வெளி வீரர்களுக்கு எந்த பாதிப்பு/ ஆபத்து ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உண்மையில், இந்த இயந்திரத்தின் செயல்முறை தானாகவே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் நீண்ட கால விண்வெளி பயணங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிக்க உணவு சமைப்பது அவசியமாகும். மைக்ரோ கிராவிட்டி பற்றி புரிதலை கொண்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிணாம வளர்ச்சியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இது போன்ற ஒதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.