ஜெர்மன் அதிபரைக் கடித்த கிளி... கிண்டலடித்து மீம்களை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!
பறவைகள் பூங்காவிற்கு எதிர்பாராத விதமாக வருகை தந்த ஏஞ்செலா மெர்க்கல் அங்குள்ள பறவைகளை கையிலேந்தி விளையாடினார். கேமராக்களுக்கு போஸ்கொடுத்த நிலையில் இருந்த அவரை கிளியொன்று தாக்கியது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல்லை ஆஸ்திரேலிய வகையைச் சேர்ந்த கிளியொன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அது குறித்த மீம்களும் வைரலாகி வருகின்றன.
ஜெர்மனியில் நாளை (செப். 26) தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியின் அதிபராக பதவி வகித்த ஏஞ்செலா மெர்க்கல் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். இருப்பினும் தனது CDU கட்சிக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் ஒருபகுதியாக மெர்லோவ் பகுதியில் உள்ள பறவைகள் பூங்காவிற்கு எதிர்பாராத விதமாக வருகை தந்த ஏஞ்செலா மெர்க்கல் அங்குள்ள பறவைகளை கையிலேந்தி விளையாடினார். கேமராக்களுக்கு போஸ்கொடுத்த நிலையில் இருந்த அவரை எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியன் வானவில் லாரிகீட் வகையைச் சேர்ந்த கிளி அவர் கைகளைக் கடித்தது.
அவர் பயந்து அலறும் தருணத்தில் புகைப்படம் எடுத்து புகைப்படக்காரர் அதனை ட்விட்டரில் பதிவிட்டார்.
Merkel visited a bird zoo today and the photos are everything. This isn't photoshop, it actually happened pic.twitter.com/f4IHRIzXwt
— Marcel Dirsus (@marceldirsus) September 24, 2021
அதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை மீம் கண்டெண்ட்டாக மாற்றி பல்வேறு பதிவுகளை வரிசையாக போடத்தொடங்கினர். மீம் கிரியேட்டர்கள் பல்வேறு மீம்களை பதிவிட்டனர்.
பிரதமர் மோடி, ஏஞ்செலா மெர்க்கல் போலவே பறவைகளுடன் விளையாடும் படத்தை பதிவிட்டு யார் போஸ் சிறப்பாக இருப்பதாக நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்,
‘ஹோம் அலோன்’ எனும் படத்தில் வரும்
பிஜியன் லேடி போன்று இருக்கிறார் என்று பதிவிட்டனர்
Angela Merkel at a bird sanctuary giving me Home Alone 2 Pigeon Lady vibes pic.twitter.com/AgtJcEUQ9J
— Shash (@shash_____) September 24, 2021
2019ல் கொரோனாவுக்கு முன்பு நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அதன்பிறகு அலறும் அதிபரை போன்று மாறிவிட்டோம் என்றும் பதிவிட்டுள்ளார் ஒருவர்.
2019->2020-2021 https://t.co/Fq6PWIJqK0
— Oh No! (@OhNo_v3) September 24, 2021
“காலநிலை மாற்றம், வேலை பளு, உறக்கமின்மை இவ்வளவுக்கும் நடுவில் எப்படி ஆகிவிட்டேன் நான்”
made meme pic.twitter.com/QJphdHLwzc
— Katherine Krueger (@kath_krueger) September 24, 2021