fish with human-like teeth: மனிதர்கள் போல் பற்களை கொண்ட மீன் - புகைப்படம் வைரல்
இதனின் வாய் பகுதி ஆட்டின் வாயைப் போல் இருப்பதினால் 'ஆட்டுத்தலை மீன்' என்ற பெயரில் அறியப்படுகிறது
மனிதர்களை போல் பற்களை கொண்ட மீன் ஒன்று வடக்கு கரோலினாவில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு கரோலினாவில் இயங்கி வரும் ஜென்னட் பியர் என்ற மீன்பிடி தலம் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
இந்த வகை மீன்களுக்கு கடைவாய்ப்பற்கள் இருப்பதினால், கடினமான இரைகளை நசித்து, அரைத்து மெதுமையான துகள் போன்று ஆக்குகின்றன. மேலும், இதனின் வாய் பகுதி ஆட்டின் வாயைப் போல் இருப்பதினால் 'ஆட்டுத்தலை மீன்' என்ற பெயரில் அறியப்படுகிறது.
என்னுடையதை விட அதன் பற்கள் நன்றாக உள்ளன
கடவுளுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்,
இது போன்ற ஒரு மீனை நான் பார்த்ததில்லை,
எனக்கு சில நல்ல பல் மருத்துவ நிபுணர்களைத் தெரியும்!
என்று பேஸ்புக் பயனர்கள் வேடிக்கையான கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
மனிதர்கள் போன்று பற்களை கொண்ட இந்தவகை மீன்கள் வடக்கு மற்றும் தெற்கு கரோனாலினா கடற்கரைகளில் காணக்கிடக்கின்றன. இந்தவகை மீன்கள் சுமார் 10 - 20 அங்குலம் வளரக் கூடியது எனக் கூறப்படுகிறது.
மீன் இனங்கள்:
நீராதாரம் தான் பெரும்பான்மையான மீன் இனங்களின் வாழிடங்களாகும். இவை பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்கின்றன. உயரமான மலை நீரோடைகள் (எ.கா., கேர், கட்ஜன்) இருந்து தாழ்ந்த, ஆழ்ந்த கடல்களின் ஆழத்திலும் (எ.கா., கல்பர்ஸ் (குள்ள மீனினம், தூண்டி மீன்), எனக் கிட்டத்தட்ட அனைத்து நீர் சூழல்களிலும் அவை காணப்படுகின்றன. சுமார் 33,100 மீன் சிற்றினங்கள், மற்ற எந்த ஒரு முதுகெலும்பிகளிலும் இல்லாத அளவிற்கு உயிரினப்பல்வகைமையைக் கொண்டுள்ளன.
பிலிப்பைன்சு நாட்டில் உள்ள நீர்நிலைகளில் வாழும் குட்டிக் கோபி என்னும் சிறு மீன் வகை சுமார் 13 மில்லி மீட்டர் நீளம் தான் இருக்கும். ஆனால் திமிங்கிலச்சுறாமீன் என்னும் மீன் சுமார் 18 மீட்டர் (60 அடி) நீளம் கொண்டிருக்கும். திமிங்கிலச்சுறா மீன் சுமார் 14 மெட்ரிக் டன் எடை கொண்டிருக்கும் (அதாவது இரண்டு யானையின் எடை இருக்கும்).
பல்வேறு பண்பாடுகளில் மீனானது புனித தெய்வமாக, பண்பாட்டுச் சின்னமாகவும் சமய அடையாளங்களாகவும் திகழ்கிறது. பல்வேறு காலகட்டங்களில் கதை, இலக்கியம், காவியம், வானுடவியல், வரலாறு, போன்றவற்றில் முக்கியப் பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளது.
மேலும், வாசிக்க:
ஜி.பி.முத்து மீது கொலை மிரட்டல் புகார் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல நடிகர் மனு