மேலும் அறிய

ஜி.பி.முத்து மீது கொலை மிரட்டல் புகார் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல நடிகர் மனு

நடிகர் காதல் சுகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜி.பி.முத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

தமிழில் பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை மூலம் பிரபலமானவர் நடிகர் சுகுமார். மேலும், இவர் திருவிளையாடல் ஆரம்பம், விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சண்டிமுனி உள்பட ஏராளமான பல படங்களில் நடித்துள்ளார். மேலும், திருட்டு விசிடி மற்றும் சும்மாவே ஆடுவோம் என்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, நெல்லை சங்கர், சேலம் மணி ஆகியோர் தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக புகார்மனு அளித்திருந்தார்.

ஜி.பி.முத்து மீது கொலை மிரட்டல் புகார் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல நடிகர் மனு

பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, ”இன்று கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்று வருகின்றனர். இதனால், குழந்தைகளின் கைகளில் செல்போன்கள் அளிக்க வேண்டியுள்ளது. ஆனால், அப்போது மிகவும் ஆபாசமாகவும், கேட்கக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்தியும், தங்களை பிரபலங்கள் என்று கூறி டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அவற்றை பதிவிட்டும் வருகின்றனர். அதைப் பார்க்கும் மாணவர்கள் அந்த வீடியோக்களில் வருவதைப் போன்று தாங்களும் செய்ய வேண்டும் என்று நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வருகிறது.

அதனால், நான் இவ்வாறு பேசுவது எல்லாம் தவறு. தமிழர்களுக்கென்று ஒரு கலாச்சாரம் உண்டு. தமிழர்களுக்கென்று ஒரு பண்பாடு உண்டு. இதனால், அவ்வாறு பேசுவது எல்லாம் தவறு என்று ஒரு பேட்டியில் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தேன். அதைப் பார்த்த பலரும் எனக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

ஜி.பி.முத்து மீது கொலை மிரட்டல் புகார் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல நடிகர் மனு

அதைப்பார்த்த இருவர் என்னை தரக்குறைவாக பேசியும், மிரட்டியும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோ ஆதாரங்களை காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார்மனுவாக அளித்துள்ளேன். அவர்கள் செய்யும் தவறுகளை கண்டித்து கருத்து தெரிவித்தால், அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசி கீழ்த்தரமாக வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் எனக்கு நேரடியாக பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தவன் சேலம் மணி. பிறகு நெல்லை சங்கர் என்பவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. நேற்று ஜி.பி.முத்து நேரடியாக என்னை தாக்கி பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். அவரின் பெயரை பயன்படுத்தி நாங்கள் பிரபலமாகிறோம் என்று அவர் பேசியுள்ளார். திரைத்துறையில் 23 ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.பி.முத்து மீது கொலை மிரட்டல் புகார் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல நடிகர் மனு

முன்னதாக, நடிகர் சுகுமார் உள்பட சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், யூ டியூப், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்ற சென்சார் எல்லாம் கிடையாது. இதனால், ரவுடிபேபி சூர்யா, ஜி.பி.முத்து போன்றோர் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்களை பார்த்து சிறுவர்கள் தவறான வழியில் செல்கிறார்கள். அவர்களை அழைத்து விருது கொடுக்கிறார்கள். இதைப்பார்த்த என்னுடைய மகள், நானும் இதுபோன்று ஆபாசமாக பேசினால் எனக்கும் விருது கொடுப்பார்களா? என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது ஏராளமான குறும்படங்களிலும், சன்னிலியோன் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget