Minister Romina : 26 வயது… மனம் முழுக்க தீர்க்கம்.. காலநிலை அமைச்சராக பதவியேற்ற ரோமினா.. யார் இவர்?
இந்த இளம் அமைச்சர் கடந்த காலத்தில் ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியுடன் (SD) தனது கட்சியை நெருக்கமாக இணைக்கும் கிறிஸ்டெர்சனின் நடவடிக்கையை வெளிப்படையாக விமர்சித்தவர்.
![Minister Romina : 26 வயது… மனம் முழுக்க தீர்க்கம்.. காலநிலை அமைச்சராக பதவியேற்ற ரோமினா.. யார் இவர்? 26 year old young minister Romina sworn in as Sweden Democratic Party climate minister Minister Romina : 26 வயது… மனம் முழுக்க தீர்க்கம்.. காலநிலை அமைச்சராக பதவியேற்ற ரோமினா.. யார் இவர்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/54fc331c6b32a3e1f8887989d77024d01666152433505109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஸ்வீடனின் புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், 26 வயதான பெண் ஒருவர் காலநிலை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் அமைச்சராக பதவியேற்கும் இளைய நபராக உருவெடுத்துள்ளார்.
26 வயதில் அமைச்சர்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி உல்ஃப் கிறிஸ்டெர்சன் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களில் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. தீவிர வலதுசாரி ஆன இவர், ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியினரால் ஆதரிக்கப்பட்ட வலதுசாரி கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது அமைச்சரவையில் காலநிலை அமைச்சராக ரோமினா பூர்மோக்தாரியை நியமித்துள்ளார். 26 வயதான ரோமினா பூர்மோக்தாரி லிபரல் கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்து இந்த இடத்திற்கு வந்தவர். இந்த இளம் அமைச்சர் கடந்த காலத்தில் ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியுடன் (SD) தனது கட்சியை நெருக்கமாக இணைக்கும் கிறிஸ்டெர்சனின் நடவடிக்கையை வெளிப்படையாக விமர்சித்தவர்.
வெளிப்படையான SD எதிர்ப்பு
"SD இல்லாமல் உல்ஃப் கிறிஸ்டெர்சன் - கண்டிப்பாக வேண்டும். SD உடன் உல்ஃப் கிறிஸ்டெர்சன் - இல்லை, வேண்டாம்," என்று அவர் 2020 இல் ட்விட்டரில் ஒரு பதிவில் எழுதினார். ஸ்டாக்ஹோமின் புறநகரில் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த இந்த இளம் பெண், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் இலாகாவை மரபுரிமையாகப் பெற்றுள்ளார்.
இளம் அமைச்சராக சாதனை
மேலும் இவர் இளைய அமைச்சருக்கான முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். முந்தைய சாதனை 27 வயதாக இருந்தது. இவர் மில்லியன் கணக்கான இளைஞர்களுடன் ஒரு பெரிய உலகளாவிய இயக்கத்தைத் தொடங்கினார், இது காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் குறித்த விவாதத்தைத் தூண்டியது.
கிறிஸ்டெர்சன் ஆட்சி அமைப்பு
கிறிஸ்டெர்சன் தனது கட்சிக்காரர்கள் மற்றும் தேசியவாத மற்றும் குடியேற்ற எதிர்ப்பு ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியினருடன் ஒரு ஒப்பந்தத்தை எழுதிய பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்வீடனின் கூட்டணி அரசாங்கம் அறிவிக்கப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகள் கொள்கை உறுதிப்பாடுகளுக்கு ஈடாக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தது. அமைச்சரவையை முன்வைக்கும் போது, நாடு ரஷ்யாவுடன் பதட்டங்களை எதிர்கொள்வதால், "சிவில் பாதுகாப்பு" க்காக ஒரு புதிய மந்திரி பதவியை உருவாக்குவதாகவும் கிறிஸ்டர்சன் அறிவித்தார். 1930களில் இருந்து ஸ்வீடன் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சமூக ஜனநாயகக் கட்சியினரைப் பின்தள்ளி, ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியினர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றனர். அதுமட்டுமின்றி நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)