மேலும் அறிய
Advertisement
பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறலாம்; மருத்துவர் அறிக்கைகள் பொய்யாக இருக்காது - மதுரை உயர்நீதிமன்றம்
பொதுவாக போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சாட்சியங்கள் ஆகியோர் சமுதாயத்திற்கும், குற்றவாளிகளுக்கு பயந்து சாட்சி சொல்வதற்கு முன் வருவதில்லை. அதுபோன்ற வழக்குகளில் இதுவும் ஒன்று. - நீதிபதிகள்
போக்சோ வழக்கில் தஞ்சாவூர் கீழமை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
போக்சோ வழக்கில் தஞ்சாவூர் கீழமை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி இளவரசன், கார்த்திக் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் வழங்கிய உத்தரவில், டியூஷன் படிக்கச் சென்ற மாணவியை கடத்தி 6 நபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி உள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு எந்த பாலியல் துன்புறுத்தலும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால், விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவரிடம் அளித்த வாக்குமூலம், மருத்துவ சோதனை ஆகியவற்றின் மூலம் மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறலாம். ஆனால், மருத்துவர் அறிக்கைகள் பொய்யாக இருக்காது.
பொதுவாக போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சாட்சியங்கள் ஆகியோர் சமுதாயத்திற்கும், குற்றவாளிகளுக்கு பயந்து சாட்சி சொல்வதற்கு முன் வருவதில்லை. அதுபோன்ற வழக்குகளில் இதுவும் ஒன்று.
பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவ அறிக்கையில் இளவரசன் மற்றும் கார்த்திக் ஆகியோரின் டி.என்.ஏ உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு தஞ்சாவூர் கீழமை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
எனவே, இந்த வழக்கில் தஞ்சாவூர் கிழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. என கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கு
திண்டுக்கல் லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்புறம் காம்பவுண்டு சுவரை ஒட்டி அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்க கோரிய வழக்கில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழா எப்போது என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல், மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவர் இலக்கியப் பேரவை சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "திண்டுக்கல் லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்புறம் காம்பவுண்டு சுவரை ஒட்டி அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பெற தடையில்லாச் சான்று பெற்று உள்ளனர். அதன் அடிப்படையில், அமைப்புக்குழு சார்பில் சிலைக்கு பீடம் அமைத்து எங்கள் செலவில் சிலையைப் பீடத்தில் கடந்த 10.08.2021 அன்று நிறுவிவிட்டோம்.
ஆனால், திடீரென திண்டுக்கல் காவல் துறை அதிகாரிகளும் மேலும் போக்குவரத்து போலீஸ்காரர்களும் பெருந்திரளாக அந்த இடத்திற்கு வந்து, எந்தவித காரணமும் இன்றி சிலையைக் கீழே இறக்கி தரையில் வைத்து விட்டனர். இது தமிழினத்துக்கும் ஏற்பட்ட அவமானமாகும் .
சிலை அமையப் பெற்ற இடம் தகுந்த அனுமதியின் பேரில் பெறப்பட்டது. எந்த வித இடையூறும் ஏற்படுத்தாததால் நிறுவப்பட்ட சிலையை காவல்துறையினரே முகாந்திரமுமின்றி இறக்கி வைத்துள்ளனர். எனவே, பீடத்தில் இருந்து இறக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவரது சிலையை மீண்டும் பீடத்தில் நிறுவிட அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், உள்ளாட்சி பள்ளி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அனுமதி வழங்கி விட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மட்டும் அனுமதி மறுக்கிறார் என வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அய்யன் திருவள்ளுவர் உலகத்திற்கு நல்ல கருத்துகளை போதித்தவர் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் சிலை திறப்பு விழா எப்போது என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion