Masturbation: அளவுக்கு அதிகமான சுய இன்பம்: நுரையீரலில் பாதிப்பு: ஐசியூ அனுமதிக்கப்பட்ட 20 வயது இளைஞர்!
சுய இன்பம் செய்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சுய இன்பம் செய்வது சரியா? தவறா? என்ற பல கேள்வி இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற கூற்றுக்கு ஏற்ப அளவாக செய்தால் எதுவும் நல்லது தான். ஆனால் ஒரு இளைஞர் அளவிற்கு அதிகமாக சுய இன்பம் செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவம் சார்ந்த ஜெர்னல் ஒன்றில் ஒரு சம்பவம் பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் சுய இன்பம் செய்யும் போது அதிகமான நெஞ்சு வலி மற்றும் மூச்சுதிணறலால் அவதிப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கு அவர் அதிகமாக சுய இன்பம் செய்ததும் ஒரு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி அந்த நபருக்கு சப்டென்சியஸ் எம்ப்சிமா(subcutaneous emphysema (SPM)) என்ற அறியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருமல் மற்றும் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்கள் அல்லது அதிகமாக உடலை வறுத்தும் உடல் பயிற்சி செய்பவர்களுக்கு இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு நுரையிரலிலிருந்து செல்லும் காற்று கசிந்து மூச்சு திணறல் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோய் பாதிப்பு பெரிதாக மருத்துவம் தேவையில்லை. ஒன்று முதல் இரண்டு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் 2 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். அந்த நபருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சுய இன்பம் அல்லது உடலுறவு தொடர்பாக இதுவரை இந்த நோய் பாதிப்பு யாருக்கும் ஏற்பட்டத்தில்லை. எனவே இந்த இளைஞருக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சிலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கூடுதலாக சில ஆய்வுகளை செய்ய அவர்கள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்