என்னது ஒரு வயசு குழந்தை வேலை செய்யுதா? 75 ஆயிரம் சம்பளமா? இதுதான் அந்த Insta வேலை
ஒரு வயது குழந்தை ஒன்று மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இன்ஸ்டாகிராம் தளத்தில் பல்வேறு விதமான இன்ஃபுளுவென்சர்கள் இருப்பது வழக்கம். அவர்கள் தங்களுடைய ஃபாலோவர்களிடம் ஒரு பொருள் தொடர்பாகவோ அல்லது ஒரு விஷயம் தொடர்பாக கருத்துகளை கூறி வருவார்கள். இதற்காக அவர்களுக்கு அந்தந்த பொருட்கள் சார்ந்தவர்களிடம் பணமும் கொடுக்கப்பட்டு வருவது வழக்கம். அந்தவகையில் பொருட்கள், உணவு, பயணம், ஹோட்டல்கள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு பேர் உள்ளனர்.
இப்படி பலர் இருக்கும் போது 1 வயது குழந்தை ஒன்று மாதம் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது. அது எப்படி தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை ப்ரிக்ஸ். இவருடைய பெயரில் இவருடைய தாய் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியுள்ளார். அவர் ஒரு வலைதள போஸ்ட் செய்யும் பெண்மணியாக இருந்து வந்துள்ளார். அதில் பயணம் தொடர்பான பதிவுகளை எழுதி வந்துள்ளார். ஆனால் மகப்பேறு காலத்தில் அவரால் எந்தவித வேலையும் செய்ய முடியவில்லை. இதனால் அவருடைய வேலை முடிந்துவிடும் என்று நினைத்துள்ளார்.
View this post on Instagram
அந்த சமயத்தில் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுவென்சர்ஸ் தொடர்பாக அவர் கேள்விப்பட்டுள்ளார். அதில் குறிப்பாக குழந்தைகள் இன்ஃபுளுவென்சர்ஸாக இருக்கிறார்களா என்று அவர் தேடியுள்ளார். ஆனால் அப்படி யாரும் இல்லை என்று அவருக்கு தெரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் செய்த பயணம் தொடர்பான தன்னுடைய குழந்தையை அழைத்து சென்று செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக தன்னுடைய குழந்தையின் பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியுள்ளார். அந்த கணக்கில் குழந்தையுடன் அமெரிக்காவிலுள்ள நகரங்களை சுற்றி அங்கு குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு ஏற்ற இடம் தொடர்பாக பதிவுகளை செய்துள்ளார். அவர் தொடங்கிய சில நாட்களுக்குள் 30 ஆயிரம் பேருக்கு மேல் இந்த கணக்கை பின் தொடர்ந்துள்ளனர். அவர் தன்னுடைய குழந்தை பிரிக்ஸ் உடன் அமெரிக்காவின் 16 நகரங்களுக்கு சென்று பதிவுகளை செய்துள்ளார்.
View this post on Instagram
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி பிறந்த குழந்தை ஒரு ஆண்டிற்குள் 16 அமெரிக்க நகரங்களை சுற்றி பார்த்துள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியே செல்லும் திட்டத்தை கைவிட்டிருந்தனர். தற்போது ஒரு சில நாடுகள் தங்களுடைய சுற்றுலா தளங்களை திறந்து வருவதால் விரைவில் ஐரோப்பாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்தக் குழந்தையுடன் அவர்கள் போடும் பதிவிற்கு மாதம் சுமார் 1000 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக கிடைக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் மாதம் 75ஆயிரம் ரூபாய் மாதம் இந்த குழந்தை சம்பாதிக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டயரில் சிக்கித் தவித்த குட்டி யானை... தாய் யானை செய்த நெகிழ்ச்சி சம்பவம்! பாசத்திற்கு வேசமில்லை!‛