பெண் கைதியை நிர்வாணப்படுத்தி, நடனமாடவைத்து வீடியோ எடுத்த பெண் போலீஸ்.. அடுத்தடுத்து அதிர்ச்சி
சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையே அதுவும் ஒரு பெண் காவலரே ஒரு பெண்ணுக்கு இழைத்திருக்கும் அநீதி அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் அமைந்திருக்கிறது பலுசிஸ்தான் மாகாணம். அந்த மாகாணத்தில் இருக்கும் குவெட்டாவின் ஜின்னா டவுன்ஷிப்பில் ஒரு குழந்தையைக் கொன்றது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் பாரி குல் என்ற பெண்ணைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றார்.
அப்போது அந்தப் பெண்ணை காவல் துறை பெண் ஆய்வாளர் ஷபானா இர்ஷாத் என்பவர் காவல் நிலையத்தில் வைத்தே நிர்வாணமாக்கியதோடு மட்டுமல்லாமல், சிறையில் மற்றவர்கள் முன் நிர்வாணமாக நடனமாடவும் வற்புறுத்தினார். அதுமட்டுமின்றி அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறை மேலிடத்திற்கு சம்பவம் தொடர்பாக புகார் சென்றது. காவல் துறைக்கே களங்கம் ஏற்படுத்திய பெண் காவல் ஆய்வாளரை உடனடியாக பணி நீக்கம் செய்த காவல் துறை, மேற்கொண்டு அவர் நிரந்தரமாக காவல் பணியை தொடர முடியாதளவிற்கு கட்டாய ஓய்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Watch Video | கொதித்த சூப்பால் கொதித்துப்போன பெண்! : அடுத்து என்ன காரியம் செய்தார் தெரியுமா?
இதுகுறித்து குவெட்டா காவல் துறை துணை ஆய்வாளர் ஜெனரல் முகமது அசார் அக்ரம் கூறுகையில், "ஒரு பெண் இன்ஸ்பெக்டர் சக பெண்ணிடம் இப்படிச்செய்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாது. சிறையில் இருக்கும் பெண்ணை ஒரு பெண் இன்ஸ்பெக்டரால் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பதை நாங்கள் கட்டாயமாக்கியுள்ளோம்” என்றார்.
சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையே அதுவும் ஒரு பெண் காவலரே ஒரு பெண்ணுக்கு இழைத்திருக்கும் அநீதி அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கோவை சம்பவத்தை அடுத்து கிளம்பும் பகீர்.. ஊழியர் மகளுக்கு, கரூரில் பிரபல மருத்துவரால் பாலியல் தொந்தரவு..
Suriya | அடுத்த அடி மரண அடி.! சூர்யாவின் அடுத்தப் படம் பொள்ளாச்சி சம்பவமா? கசிந்த தகவல்!
Watch video: நானும் சிங்கம்தான் பாஸு.. நம்ப மாட்டீங்களா..? வைரலாகும் லோ பட்ஜெட் சிங்கம்..