மேலும் அறிய

வாட்ஸ் அப் மூலம் தொலைத்த பணத்தை மீட்ட மரவியாபாரி; குவியும் பாராட்டுகள்!

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பணத்தை வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பி, உரியவரிடம் கொண்டு சேர்த்த மரவியாபாரியின் நேர்மையை பாராட்டி போலீஸார் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பணத்தை வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பி, உரியவரிடம் கொண்டு சேர்த்த மரவியாபாரியின் நேர்மையை பாராட்டி போலீஸார் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
 
கும்பகோணம் முருக்கங்குடியை சேர்ந்த மரவியாபாரியான ராமதாஸ் என்பவர் கடந்த 17-ம் தேதி இரவு சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்றபோது ரூ.20,400 பணம் கத்தையாக கீழே கிடந்ததை எடுத்த அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்ரேட்டராக உள்ள தனது நண்பர் பாஸ்கர் என்பவரிடம் பணம் சாலையில் கிடந்தது குறித்தும், அந்த பணத்தை எப்படியாவது உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்த எவ்வளவு பணம் மற்றும் எந்த இடத்தில் கிடந்தது பணத்தை பெற்றுகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து வாட்ஸ்ப்குழுக்களில் பதிவு செய்தார் பாஸ்கர். அதன்படி கும்பகோணம் சாக்கோட்டையைச் சேர்ந்த உப்பிலி என்பவர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அது தன்னுடைய பணம் என்றும் கடந்த 17-ம் தேதி தொலைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று (19ம்தேதி) நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு அவர் வரவலைக்கப்பட்டு அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி பணம் தொலைந்தது எப்படி என விசாரித்தார்.
 
அப்போது தான் சாக்கோட்டையில் உள்ள பேக்கரியில் இருந்து பால்கோவா மற்றும் இனிப்புவகைகளை மொத்தமாக வாங்கி கும்பகோணம், பட்டீஸ்வரம், திருப்பனந்தாள், நாச்சியார்கோவில், சோழபுரம் பகுதிகளில் உள்ள சிறுசிறு கடைகளில் விற்பனை செய்துவிட்டு, வாரம் ஒருமுறை அந்த கடைகளுக்கு சென்று பணத்தை வசூல் செய்துவருவதாகவும் தெரிவித்தார். அதன்படி கடந்த 17-ம் தேதி திருப்பனந்தாள் பகுதியில் வசூலை முடித்துக்கொண்டு வீட்டுக்கு  சென்று வசூல் செய்து வைத்திருந்த பணப் பையை பார்த்த போது அதில் இருந்த வசூல் பணம் ரூ.20,400 பணக்கட்டு காணாமல் போயிருந்தது. வரும் வழியில் விழுந்திருக்ககூடும் என எண்ணி வாகனத்தை எடுத்துக்கொண்டு தான் வந்த பாதை முழுவதிலும் தேடிச்சென்றேன். இரவு நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தியுடன் வீட்டுக்கு திரும்பி பணம் தொலைந்தது குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறி அழுது புலம்பினேன் என தெரிவித்துள்ளார். பின்னர் தான் வசூல் செய்ததற்கான வரவு செலவு நோட்டுகளையும் போலீஸிடம் காண்பித்துள்ளார்.

வாட்ஸ் அப் மூலம் தொலைத்த பணத்தை மீட்ட மரவியாபாரி; குவியும் பாராட்டுகள்!
 
இதையடுத்து தொலைந்தது அவரது பணம் என உறுதிசெய்த பிறகு அந்த பணத்தை கண்டெடுத்து கொண்டுவந்த மரவியாபாரி ராமதாஸ், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரப்பிய அவரது நண்பர் பாஸ்கர் ஆகியோர் மூலம் நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி பணத்தை பறிகொடுத்த உப்பிலியிடம் ஒப்படைத்தனர். பணத்தை பெற்ற உப்பிலி கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றி கூறினார். 

வாட்ஸ் அப் மூலம் தொலைத்த பணத்தை மீட்ட மரவியாபாரி; குவியும் பாராட்டுகள்!
பின்னர்  சாலையில் கண்டெடுத்த பணத்தை நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த மரவியாபாரி ராமதாசுக்கு இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீஸார் சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி பாராட்டினார்.

தலைப்பு செய்திகள்

Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget