மேலும் அறிய
Advertisement
விழுப்புரத்தில் முடங்கி போன அரசுப்பணிகள்... போராட்டத்தில் குதித்த கிளார்க்... காரணம் இதுதான் !
2 ஆம் கட்டமாக அடுத்த மாதம் செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான பெருந் திரள் முறையிட்டு இயக்கம் நடத்தப்பட உள்ளது.
விழுப்புரம்: ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி இன்று தற்செயல் விடுப்பு எடுத்து ஊராட்சி செயலர்கள் கையில் பதாகைகளை ஏந்தி விழுப்புரம் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே ஊராட்சி செயலர் பெண் ஒருவர் பாடல் பாடி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இனைக்க வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சி செயலர்களில் 560 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் கையில் பதாகைகளை ஏந்தி கண்டம ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஊராட்சி செயலரை டிஸ்டர்ப்பண்ணாதே! அவனை அசால்டாக நினைத்துவிடாதே" பட்டுபாடிய ஊராட்சி செயலர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஊராட்சி செயலரை டிஸ்டர்ப்பண்ணாதே அவனை அசால்டாக நினைத்துவிடாதே வெட்ட வெட்ட வளருவான் கொட்ட கொட்ட எகுறுவான் என ஊராட்சி செயலர் பெண்மணி ஒருவர் பாடல் பாடி ஆர்ப்பாட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 27 ஆம் தேதி பனகல் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊராட்சி செயலர்களின் தற்செயல் விடுப்பால் பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion