சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை - போலி சாமியார் உட்பட 3 பேர் கைது
Villupuram News: போலி சாமியார் எல்லப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரபு, சின்னபையன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த போலி சாமியார் உட்பட 3 பேரை 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 13 ஆம் தேதி வீட்டில் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது கீழ் ஆதனூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி உள்ளார். அப்போது சிறுமி திண்டிவனம் செல்வதாக கூறி உள்ளார். திண்டிவனத்தில் விடுகிறேன் என ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மதுராந்தகம் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை காணவில்லை என திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். இதனிடையே போலீசார் சிறுமியின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்து உள்ளனர். பின்னர் வேறு தொலைபேசி எண்ணை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் செல்போனில் ஐஎம்இ என்னை வைத்து ஆய்வு செய்ததில் வேறு ஒரு நபர் பேசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த எண்ணை ஆய்வு செய்து செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தில் சிறுமி உட்பட மூன்று பேர் சிறுமியை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட போலீசார் மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவன் மகன் எல்லப்பன் (39), என்பதும் இவர் கடந்த 13 ஆம் தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் எல்லப்பன் சிறுமியை கடத்தி சென்று மதுராந்தகம் அடுத்த சிறுபேர்பாண்டி கிராமத்தில் மணி மகன் பிரபு என்கின்ற அப்பு (33) என்பவர் வீட்டில் அடைத்து வைத்ததும், போலீசார் தேடுவதை அறிந்து செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் புவனேஸ்வரி நகரில் அண்ணன் மகன் சின்னப்பையன் (53), என்பவரது ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போலி சாமியார் எல்லப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரபு, சின்னபையன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
Also Read | Chennai Rain News LIVE Tamil: சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: நாளை வரை கனமழை எச்சரிக்கை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்