மீண்டும் மீண்டுமா..? வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்; கண்ணீரில் திண்டிவனம் மக்கள்
திண்டிவனத்தில் வீரங்குளம் ஏரி உடைந்ததால் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி.
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் நீர் நிலையங்கள் நிரம்பின பல்வேறு வீடுகளிலும் விவசாய நிலம் தண்ணீர் புகுந்தது கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில் தண்ணீர் வடிய தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது ஏற்கனவே பெய்த மழையால் காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி வகாப் நகர், இந்திரா நகர், காந்திநகர் போன்ற பல்வேறு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. தற்போது காவேரி பாக்கம் எரியில் இருந்து வரும் நீர் வீராங்குளம் ஏரி வழியாக கர்ணாவூர்பாட்டை ஓடை வழியாக கடலுக்கு செல்லும், இந்த நிலையில் தற்பொழுது திடீரென ஏரியின் மதகுப் பகுதியை உடைந்துள்ளது.
அதிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் திண்டிவனம் வகாப்நகர், காந்திநகர், இந்திரா நகர் போன்ற பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறத் தொடங்கி உள்ளனர். மேலும் இந்த வெள்ளநீர் திண்டிவனம் - புதுவை நெடுஞ்சாலை பகுதிகளிலும் ஓடுவதால் வாகன ஓட்டுக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
நாளை சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன அழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் வலு குறையும். தென் தமிழக மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 72 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. வடகிழக்குப் பருவ மழை இயல்பை விட 16 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அந்தமான் கடற்கரைக்கு அருகே வரும் 15ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் நகர்வைப் பொறுத்து தமிழ்நாட்டில் மழை இருக்குமா என்று தெரிய வரும்’’ என்று தெரிவித்துள்ளார்.
13-12-2024:
தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது
13.12.2024:
தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம். சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.12.2024 மற்றும் 15.12.2024:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.12.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.12.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18.12.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.