மேலும் அறிய

விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் புதிய படகுழாம்... எங்கேனு தெரியனுமா...?

விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு சிறப்பு விருந்தாக காத்திருக்கும் முத்தாம்பாளையம் படகு குழாம்.

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு 4-வது கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புறத்திற்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை உள்ளடக்கிய உறுப்பினர்களை கொண்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்குழுவின் முக்கிய நோக்கம், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை தேர்ந்தெடுந்து மாநில திட்டக்குழுவிற்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ரேடியோலஜி துறையில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு ரூ.55.00 இலட்சம் மதிப்பீட்டில் MRI கருவி அமைப்பதற்கான கட்டடம் மற்றும் காத்திருப்போர் அறை அமைத்திட மாவட்ட திட்டக்குழு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநில திட்டக்குழு அனுப்பப்பட்டு, முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து வருகின்ற நிதிநிலை அறிக்கையில் இதுதொடர்பான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்திடலாம், இதுதொடர்பாக மாநில திட்டக்குழு பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வசந்தகிருஷ்ணாபுரம், ஆடூர்கொளப்பாக்கம், வேலாகுளம், கொடுக்கப்பட்டு ஊராட்சி, கொடுக்கப்பட்டு ஆதிச்சனூர் மற்றும் கோட்டமருதூர் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையினை பூர்த்தி செய்திட மணம்பூண்டி தென்பெண்ணையாற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்துதல்,

விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி டோல்கேட் அருகில் உள்ள விக்கிரவாண்டி பெரிய ஏரியின் பாசன நிலங்கள் 300 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகளும் மற்றும் ஆவுடையார்பட்டு, கயத்தூர், ரெட்டிக்குப்பம், குத்தாம்பூண்டி, வெட்டுக்காடு கிராமத்திலுள்ள விவசாயிகளும், விவசாய விளைபொருட்களை, டோல்கேட் அருகிலுள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு (கமிட்டிக்கு) கொண்டு வருவதற்கும், மேற்படி கிராம பொதுமக்கள் போக்குவரத்திற்கும் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினால், பொதுமக்களின் நலன் கருதி, விக்கிரவாண்டி பெரிய ஏரிக்கரையை அகலப்படுத்தி, தார் சாலை அமைத்து, விவசாயிகளும் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்றிடவும்.

கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோயில்பட்டு ஊராட்சியின் குக்கிரமமான முத்தாம்பாளையம் ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நடைபாதை அமைத்தல் மற்றும் படகு சவாரி குழுமம் சுற்றுலா துறை மூலம் அமைத்தல், வேளாண்மைத்துறையின் மூலமாக சிறுதானிய பயிராகிய ராகியிணை விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்து நேரடிக்கொள்முதல் நிலையம் மூலமாக சிறுதானியத்தை கொள்முதல் செய்து முதல்வரின் காலை உணவுத்திட்டத்திற்கு பயன்படுத்தலாம் போன்ற கோரிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Embed widget