மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு; பாஜகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முன்னெடுக்கும் பாசிச அரசியலை தனிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட சி.பி.எம் மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழுப்புரம்: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முன்னெடுக்கும் பாசிச அரசியலை தனிமைப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்து அரிசி கோதுமை மீது அநியாய வரி விதிப்பிற்கு கண்டனம் தெரிவித்து சிபிஎம் மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிபிஎம் கட்சியின் ஒருங்கினைப்பாளரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத், பெண்கள் சங்க பொதுச்செயலாளர் பிருந்தா காரத், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பெண்ணடிமைத்தனத்தையும் சாதிய ஏற்றத்தாழ்வும், வலியுறுத்தும் மனுஸ்மிருதியை இந்திய அரசமைப்பு சட்டமாக்க போர்கொடி தூக்கிய ஆர்எஸ்எஸ் பரிவாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பேற்று இந்தியாவை பின்னுக்கு தள்ள நினைக்கும் பாஜகவிற்கு கண்டன தீர்மானத்தையும், அரசமைப்பு சட்டத்தை சீர்குலைத்தவர்கள் அண்னல் அம்பேத்கரை இழிவு படுத்த துவங்கியிருப்பதையும் இஸ்ஸாமியர்கள் மீது வெறுப்பை திணிக்கும் பாஜக அரசு போலீசாரை ஏவி சிறையில் அடைப்பதோடு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச்சொத்துக்களை அந்நிய இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்து அரிசி கோதுமை மீது அநியாய வரி விதிப்பிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றியுள்ளனர்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிக்க முடியாத கூட்டாட்சி சிதைக்கப்படுவதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கல்வி உள்ளிட்ட பன்முகத்தன்மை சீரழிக்கும் செயலில் பாஜக உள்ளதாகவும் ஆளுநர்கள் இணை அரசாங்கம் நடத்துவது போல இடைஞ்சல் செய்யும் நோக்கத்துடனே நியமிக்கப்படுவதாக கண்டன தீர்மானமும், பாஜக அரசு தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தின் ஒரு பகுதி சுயேச்சையான அமைப்புகளை கொண்டு அரசியல் எதிரிகளை பழிவாங்குவதாக கண்டன தீர்மானம் போட்டுள்ளனர்.
தமிழகத்தில் மதவெறி திசை திருப்பல் நடவடிக்கை மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயல்வதாகவும், தேசத்தின் ஒற்றுமையும் ஒருமைபாட்டினையும் பொதுச்சொத்துக்களை அரசியலமைப்புச் சட்டத்தையும் இயற்கை வளங்களை பாதுகாப்பது வலுப்படுத்துவது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முன்னெடுக்கும் பாசிச அரசியலை தனிமைப்படுத்த வேண்டும் என 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்....
இந்தியாவின் விடுதலைப் போராட்டம் தொடங்கி இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளதாகவும் கடந்த நூறு ஆண்டுகளில் மூன்று முறை தடை செய்யப்பட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள் தூக்கு, ஆயுள் தண்டனை, விஷம் கொடுத்து கொலை என பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். இந்த தியாகங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். உலக அளவில் வலதுசாரிகள் மேலோங்கி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அது தொடர்கிறது. இவற்றை மாற்றியமைக்கத்தான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற தலைவர்கள் புதிய திசை வழிகளை உருவாக்கினர்.
இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது கம்யூனிஸ்ட் கட்சி 70 ஆண்டுகளுக்கு முன்னே சென்னையை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாடு இயங்க வேண்டும் என்று அறிவித்தது கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ் மொழி சார்ந்து பல்வேறு பிரச்சினைகளை முன்னெடுத்தது கம்யூனிஸ்டுகள் இதுபோன்ற பல போராட்டங்களையும் தியாகங்களையும் செய்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி மென்மேலும் வளர வேண்டும் என தெரிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றுபட்டு தான் செயல்பட்டு கொண்டு இருப்பதாகவும், தொடர்ந்து ஒன்றுபட்டு செயல்படுவோம் என்றும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் மாதம் சேலத்தில் மாநில மாநாடு நடைபெற உள்ளதால் இதற்கு சி.பி.எம் மாநில செயலாளர் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.