பழுதான அமைச்சர் பொன்முடி வழங்கிய மின்கலன் வண்டிகள் - ஊராட்சி மன்ற தலைவர்கள் புலம்பல்
அமைச்சர் பொன்முடி வழங்கிய மின்கலன் வண்டிகள் பழுதாகி இருந்ததால் ஊராட்சி மன்ற தலைவர்கள் புலம்பினர்.
விழுப்புரம்: பெண்கள் குடும்பத்தில் மதிக்கப்பட வேண்டுமென என்பதற்காக திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருவதாகவும், ஆண்களுக்கு பெண்கள் அடிமையாக இருக்க கூடாதென என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடும் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று 6 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் விழுப்புரம் காந்தி சிலை அருகிலுள்ள திமுக கட்சி அலுவலகம் முன்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதனை தொடர்ந்து காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் 48 ஊராட்சிகளுக்கு 48 மின்கல வண்டிகள் வழங்கப்பட்டன.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்கள் குடும்பத்தில் மதிக்கப்பட வேண்டுமென என்பதற்காக திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருவதாகவும், பெண்கள் படிக்க வேண்டும் என்ற உணர்வோடு புதுமைப்பெண் திட்டம் அறிவித்துள்ள முதல்வர் ஆண்களுக்கு பெண்கள் அடிமையாக இருக்க கூடாதென என்ற எண்ணத்தோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடும் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கொண்டுள்ளதாக தெரிவித்தார். அதன் பின்பு ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட மின்கலன் வண்டிகள் பழுதாகி இருந்ததால் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள் மின்கலன் வண்டிகளை பழுது நீக்கி எடுத்து சென்றனர். கொடுக்கும்போது எந்த பழுதும் இல்லாமல் வழங்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.