மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ரூ.27.46 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான்
மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.27.46 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் மஸ்தான்
விழுப்புரம்: மரக்காணத்தில் மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.27.46 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
முதல்வர் திட்டத்தில் 2,946 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில், மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் சி.பழனி, தலைமையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்டப்பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், இதில் மரக்காணம் பேரூராட்சியில் மட்டும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 2,946 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 536 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 35 மனுக்கள் நிலுவையில் உள்ளது. 2,375 மனுக்கள் மீது அரசு உத்திரவாதம் வழங்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது, மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், பொதுமக்களிடமிருந்து 11,692 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 4,676 மனுக்கள் ஏற்கப்பட்டது. 2,481 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 6,305 மனுக்கள் நிலுவையில் உள்ளது. எனவே, இத்திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளுக்கு ஒருமாதத்திற்குள்ளாக அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறும்.
401 பயனாளிகளுக்கு ரூ.27,46,221/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி
அதனடிப்படையில், இன்றைய தினம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 07 பயனாளிகளுக்கு ரூ.46,830/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 06 பயனாளிகளுக்கு ரூ.29,346/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், 85 பயனாளிகளுக்கு ரூ.5,08,150/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 07 பயனாளிகளுக்கு ரூ.19,460/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 04 பயனாளிகளுக்கு ரூ.8,50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத்துறை சார்பில், 03 பயனாளிகளுக்கு ரூ.1,50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில், 38 பயனாளிகளுக்கு ரூ.11,42,435/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், எரிசக்தி துறை சார்பில், 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், வருவாய்த்துறை சார்பில், 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 82 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 401 பயனாளிகளுக்கு ரூ.27,46,221/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தயாளன், மரக்காணம் பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆளவந்தார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, தாட்கோ மாவட்ட மேலாளர் தமிழரசன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அருள், விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனி, தூய்மைப்பணியாளர் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.