மரக்காணம் அருகே இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய கடல்; மீனவர்கள் அச்சம் - காரணம் என்ன..?
விழுப்புரம் : மரக்காணம் இறால் குஞ்சு பொறிப்பகத்திலிருந்து வெளியரிய கழிவுநீர் ..... இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய கடல் நீர்....மீனவர்கள் அச்சம்
மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தை மீனவகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் குஞ்சு பொறிப்பகத்திலிருந்து கழிவு நீர் சிவப்பு மற்றும் பிங்க் கலரில் வெளியேறி கடலில் கலந்ததால் சூற்றுச்சூழல் மாசு ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்கானம் அருகேயுள்ள அனுமந்தை மீனவ குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மூன்று இறால் குஞ்சு பொறிபகங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்படகூடிய இறால் குஞ்சு பொறிப்பகங்களிருந்து கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இன்று அனுமந்தைகுப்பத்தில் செயல்படும் ஆந்திராவை சார்ந்த தனியார் நிறுவனமான பிஎம்ஆர் மீன் இறால் குஞ்சு பொறிபகத்திலிருந்து கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் இன்று வெளியேற்றப்பட்டபோது பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் வெளியேறி மணல் பகுதியில் வெளியேறியது.
விழுப்புரம்: மரக்காணம் அருகே அனுமந்தை மீனவ கிராமத்தில் உள்ள இறால் குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர்.... வரும் காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறி.....?@abpnadu @SRajaJourno @PMOIndia @CMOTamilnadu @Murugan_MoS @draramadoss @annamalai_k pic.twitter.com/lSMsx9xJbc
— SivaRanjith (@Sivaranjithsiva) November 29, 2022
இதனை கண்ட மீனவ மக்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இறால் குஞ்சு பொறிப்பகத்திலிருந்து ரசாயனம், உரங்கள் கலந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் கடலில் உள்ள மீன்கள் உயிர் வாழ் தாவரம் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர் வெளியேறியதால் அப்பகுதியை சார்ந்த மீனவர் ஒருவர் கழிவு நீர் வெளியேறும் இடத்தில் உயிருடன் ஒரு மீனை போட்ட போது இறந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்ததால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் செயல்படுக் இறால் பண்னையில் மத்திய மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம ரூபாலா ஆய்வு செய்து சென்றிருந்த நிலையில் மீண்டும் கழிவு நீர் வெளியேற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.