மேலும் அறிய

ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்

ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் ரீதியாக ஜம்மு காஷ்மீர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முக்கிய பிரச்னையாக காஷ்மீர்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், தங்களுக்கு சொந்தமான இடம் என பாகிஸ்தான் கூறி வருகிறது. இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் வெற்றி யாருக்கு?

இந்த சூழலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது.

இந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. ஆனால், தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியை பிடிக்குமா இந்தியா கூட்டணி?

தைனிக் பாஸ்கர் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 35 முதல் 40 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 20 முதல் 25 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி 4 முதல் 7 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Matrize நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 28 முதல் 30 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 28 முதல் 30 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி 5 முதல் 7 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

India Today - C Voter எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 27 முதல் 32 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி 6 முதல் 12 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 

Peoples Pulse எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 46 முதல் 50 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 23 முதல் 27 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி 7 முதல் 11 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட சர்ச்சை: மத்திய - மாநில அரசு எவ்வளவுதான் நிதி கொடுக்கிறாங்க ?
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட சர்ச்சை: மத்திய - மாநில அரசு எவ்வளவுதான் நிதி கொடுக்கிறாங்க ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட சர்ச்சை: மத்திய - மாநில அரசு எவ்வளவுதான் நிதி கொடுக்கிறாங்க ?
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட சர்ச்சை: மத்திய - மாநில அரசு எவ்வளவுதான் நிதி கொடுக்கிறாங்க ?
திருமணத்திற்குச் சென்ற பேருந்து 200அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 30 பேர் உயிரிழந்த சோகம்.! நடந்தது என்ன?
திருமணத்திற்குச் சென்ற பேருந்து 200அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 30 பேர் உயிரிழந்த சோகம்.! நடந்தது என்ன?
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
Embed widget