உலக சாகசம் நிகழ்த்திய மல்லர்கம்ப வீரர்கள்... வியந்து பார்த்த மக்கள்... இப்படியொரு கலையா ....!
காஞ்சியை ஆண்ட மாமல்லன் நரசிம்மப் பல்லவன் இக்கலையை செழிக்க செய்தான். தமிழ் நாட்டு வீர தற்காப்பு கலைகளுள் இதுவும் ஒன்று. இவ்விளையாட்டு மனதை ஒருநிலைப் படுத்தும் ஓர் கலையாகும்.
விழுப்புரத்தில் மல்லர் கம்பம் தந்தை என அழைக்கப்படும் அலகதுறை 85வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆயிரம் மல்லர் கம்ப வீரர்கள், மல்லர் கம்பம் செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
மல்லர் கம்பம் செய்து உலக சாதனை
தமிழ்நாட்டில் மல்லர் கம்பம் என்ற பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்து தமிழகத்தின் ஆயிரக்கணக்கான மல்லர்கம்ப வீரர்களையும், மல்லர்கம்ப கழகத்தையும் உருவாக்கிய விழுப்புரத்தை சேர்ந்த மல்லர்கம்பம் தந்தை என அழைக்கப்படும் உலகதுறை அவர்களின் 85வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலர்கம்ப வீரர்கள் ஒன்று சேர்ந்து உலக சாதனை நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் ஒரே நேரத்தில் ஆயிரம் மலர்கம்ப வீரர்கள், மல்லர் கம்பம் செய்து உலக சாதனை நிகழ்த்தி உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மல்லர்கம்ப வீரர்கள் 100 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் தொடர்ந்து 15 நிமிடங்கள் மல்லர்கம்பம் செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். உலக சாதனை நிகழ்வுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழை விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமசிகாமணி மல்லர் கம்பம் குழுவினருக்கு வழங்கினார். இந்த உலக சாதனை நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி கண்டு களித்தனர்.
மல்லர் கம்பம்
மல் என்னும் சொல் வளத்தைக் குறிக்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உடல்வளம் கொண்ட சங்ககால மன்னர்களில் ஒருவன் ஆமூர் மல்லன். தெருக்களில் வித்தை காட்டும் டொம்பர் தம் குழந்தைகளை நட்டுவைத்த மரத்தில் தலைகீழாக ஏறவும் இறங்கவும் செய்து விளையாட்டு காட்டுவர். தற்காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களும் பங்கு கொள்ளும் தேசிய உடல்வித்தைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வந்தாலும் 18-ம் நூற்றாண்டில் மகாராட்டிர மாநிலத்துப் பலம்பத்த தாதா தியோதர் என்பவரால் புத்துயிர் ஊட்டப்பட்ட விளையாட்டே சிறப்புற்று விளங்குகிறது. நடப்பட்ட கம்பத்தில் வித்தைகாட்டும் விளையாட்டில் ஆண்கள், பெண்கள் பங்கு கொள்வர்.
ஆதி மனிதன் மரம் ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டான். அதை விதியாக வகுத்தான். இந்தமுறையில் மனிதன் போல மரம் அல்லது கல்லில் உருவம் அமைத்து மல்யுத்தம் செய்ய பயிற்சிகள் மேற்கொண்டதால் இவ்விளையாட்டு மல்லர் கம்பம் எனப்பட்டது. தற்காலத்தில் கோவில் விழாக்களில் விளையாடும் வழுக்கு மரம் அக்கலத்தில் சோழர்கள் விளையாடிய மல்லர் கம்பததின் மறு உருவாகும். காஞ்சியை ஆண்ட மாமல்லன் நரசிம்மப் பல்லவன் இக்கலையை செழிக்க செய்தான். தமிழ் நாட்டு வீர தற்காப்பு கலைகளுள் இதுவும் ஒன்று. இவ்விளையாட்டு மனதை ஒருநிலைப் படுத்தும் ஓர் கலையாகும்.