தூண்டில் வளைவு அமைக்க கோரி உயிரிழந்தவரின் சடலத்துடன் மீனவர்கள் சாலை மறியல்
’’பல ஆண்டுகளாக சின்னமுதலியார் சாவடியில் தூண்டில் வளைவு அமைக்ககோரி போராடி வருகிறோம். அலை சீற்றத்தால் எங்களது படகுகள் கூட நிறுத்த இடம் இல்லை’’
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோட்டக்குப்பம் போலீஸ் சரகம் சின்னமுதலியார் சாவடியை சேர்ந்த மீனவர்கள் மூர்த்தி, அறிவு, பார்திபன், ஜெயபால் ஆகியோர் இன்று காலை பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும்போது கடல் சீற்றம் அதிகம் காணப்பட்டதால் ஏற்பட்ட ராட்சத அலை காரணமாக நடுகடலில் படகு கவிழ்ந்தது இதனால் மீன்பிடித்த 4 மீனவர்களும் நீரில் தத்தளித்தனர்.
Seeman on DMK Govt: மோடி விருந்தாளியா? அடுத்து காவிக்கொடிதான்! திமுகவை தாக்கிய சீமான்
இவர்களில் அறிவு, பார்த்திபன், ஜெயபால் ஆகியோர் நீந்தி கரைக்கு வந்தவர்கள் படகு கவிழ்ந்த செய்தியை ஊருக்குள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் நடுகடலில் சிக்கிய 60 வயது முதியவர் மூர்த்தியை மீட்க 20க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் அலையின் தாக்கம் காரணமாக மூர்த்தி நீரில் மூழ்கிய நிலையில் அவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
Kanimozhi Vs Udhayanidhi Stalin : உதயநிதி vs கனிமொழி.. மீண்டும் திமுகவில் உருவாகும் வாரிசு யுத்தம்!
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியதால் ஆத்திரம் அடைந்த மீனவ கிராம மக்கள் உயிரிழந்த மீனவர் மூர்த்தியின் உடலை புதுவை - மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலைக்கு கொண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன் அரசு உடனடியாக இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி முழக்கமிட்டனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மீண்டும் மஞ்சப்பை இயக்கம் - தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு வழங்கப்படும் மஞ்சப்பை
தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மீனவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக சின்னமுதலியார் சாவடியில் தூண்டில் வளைவு அமைக்ககோரி போராடி வருகிறோம். அலை சீற்றத்தால் எங்களது படகுகள் கூட நிறுத்த இடம் இல்லை என்று ஆவேசப்பட்டனர். உடனே போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். ஆனாலும் மீனவர்கள் சமரமடையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Kerala Night Curfew: கேரளாவில் இரவு ஊரடங்கு: ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் ஆஃபர் கொடுத்த அரசு!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்