மேலும் அறிய

விழுப்புரம்: குழந்தைக்கு உணவுக்குழாய் பாதிப்பு; கண்ணீர் மல்க உதவி கேட்கும் பெற்றோர் - அரசு செவி சாய்க்குமா..?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உணவுக்குழாய் பிரச்னையால் குழந்தை பாதிப்பு காரணமாக குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிக்கரம் கேட்கும் பெற்றோர்.

விழுப்புரம் அடுத்த செஞ்சியை சேர்ந்த பூபாலன் - பூங்கொடி தம்பதியரின் 22 மாத குழந்தையான ரேணுகா  உணவுக்குழல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை மேற்கொள்வதற்கு ரேணுகாவின் உடல் எடை சரியான அளவில் இல்லாததால்,  சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை மேலும் உடல் எடையைக் கூட்டுவதற்கு ரேணுகாவுக்கு உதவுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள இளங்கோவன் தெரு, பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன்( 46), பூங்கொடி (35) தம்பதியினர். இவர்களுக்கு ரேணுகா என்ற ஒன்றரை வயது  பெண் குழந்தை (22 மாதம் ) உள்ளது. பூபாலன் 32 வருடங்களாக சைக்கிளில் தேநீர் விற்று வருகிறார் . தேநீர் விற்று வரும் வருமானத்தைக் கொண்டு குடும்ப சூழ்நிலையை  கவனித்து வந்துள்ளார்.

ரேணுகா பிறந்த மூன்றாவது நாளிலேயே உணவுக்குழாய் பிரச்னையால் பாதிப்படைந்துள்ளார். இக்குழந்தை உணவு உட்கொள்ள முடியாமலும், சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டு சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதலில் கழுத்தில் ஒரு சிறிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வயிற்று பகுதியில் இரண்டு இன்ச் அளவில் ஒரு துளை போட்டு டியூப் வழியாக  உணவு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விழுப்புரம்: குழந்தைக்கு உணவுக்குழாய் பாதிப்பு;  கண்ணீர் மல்க உதவி கேட்கும் பெற்றோர் - அரசு செவி சாய்க்குமா..?

மேலும் இந்த உணவு குழல் பிரச்னையால் ரேணுகாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, சரியான உடல் எடை இல்லாததால் மருத்துவர்கள், ரேணுகாவின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். தற்போது ரேணுகாவின் உடல் எடை 9.300 கிலோ தான் உள்ளது. இந்த உடல் எடை கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்வது குழந்தையின் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல் எடை 16 கிலோவிற்கு இருந்தால் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் இல்லை என்றால்,  குழந்தையின் நிலை கேள்விக்குறி என தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட பூபாலன், பூங்கொடி என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தனர். மேலும் இதுகுறித்து ரேணுகாவின் தந்தை பூபாலன் கூறுகையில்,  ரேணுகாவிற்கு காலையில் பால் பழச்சாறு, போன்றவற்றை ட்யூப் வழியாக கொடுத்து முடிந்த அளவிற்கு உடல் எடையை கூடுவதற்கான வழியை செய்து வருகிறோம். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். ரேணுகாவிற்கு ஒரு மாத உணவிற்காக 30,000  ஆயிரம் ரூபாய் செலவாகிறது, அது மட்டுமல்லாமல் மருத்துவ செலவிற்கு ஸ்கேன் போன்றவற்றிற்கு அதிக செலவு கூடுகிறது.

விழுப்புரம்: குழந்தைக்கு உணவுக்குழாய் பாதிப்பு;  கண்ணீர் மல்க உதவி கேட்கும் பெற்றோர் - அரசு செவி சாய்க்குமா..?

நான் டீ விற்று வரும் வருமானத்தை குழந்தையின் உணவிற்கும் வீட்டு செலவிற்கு பார்த்து வருகிறேன். மேலும் தமிழக அரசாங்கம், உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்கள்  குழந்தையின் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முடிந்த அளவிற்கு பண உதவி அல்லது உடல் எடையை கூட்டுவதற்கான உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தால், மிகவும் உதவியாக இருக்கும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

உதவும் நோக்கம் கொண்ட மனிதநேயம் உள்ள பொதுமக்கள் இன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தங்களால் முடிந்த பண உதவியை செய்யுமாறு இக்குழந்தையின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர். G-PAY : 9578611786, A/C no :273601000018249, GINGEE BRANCH, IFSC : IOBA0002736, INDIAN OVERSEAS BANK.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget