Watch Video: பஸ் ஸ்டாண்டில் தரையில் தவழ்ந்து விளையாடிய போதை ஆசாமி - கண்டுகொள்ளாத போலீசார்..!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் குடி போதையில் தரையில் தவிழ்ந்து விளையாடிய போதை ஆசாமி
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ஆசாமியை கண்டு காணாமல் இருந்த காவல்துறையினரால் பொது மக்கள் அவதியுற்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் தென் மாவட்டங்களை இணைக்கின்ற முக்கியமான மற்றும் மிக பெரிய பேருந்து நிலையமாக திகழ்ந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 100க்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கான உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக அந்த பேருந்து நிலையத்தில்மது போதை ஆசாமிகளின் அட்டாசங்கள் அதிகரித்து வருகின்றன.
விழுப்புரம் : புதிய பேருந்து நிலையத்தில் தரையில் தவழ்ந்து விளையாடிய போதை ஆசாமி@abpnadu #villupuram pic.twitter.com/NuInQZTmH3
— SIVARANJITH (@Sivaranjithsiva) June 27, 2022
அதே போன்று நேற்று 50 வயது மதிக்கத்தக்க நபர் உச்சி வெளியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க விடாமல் அந்த நபர் மது பாட்டில்களோடு அலப்பறையில் ஈடுபட்டதால் பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக படுத்து உருண்டு, பிரண்டு பேருந்து நிலையத்தை வளம் வந்த அவரை கண்டும் காணாமல் காவல் துறையினர் இருந்துள்ளனர். இதனால், பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
பின்னர் ஒரு கட்டத்தில் கடுப்பான பயணி ஒருவர் அலப்பறையில் ஈடுபட்ட அவரை அப்புறப்படுத்தினார். இதுபோன்று பொது இடங்களில் மது போதையில் ரகளையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தி மக்கள் அவதியுறாமல் பாதுகாக்க காவல்துறை முன் வராதது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு தொந்தரவு அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும், விழுப்புரத்தில் மறைமுகமாக, சட்ட விரோதமாக சாராயம் மற்றும் புதுவை மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை காவல் துறையினர் தடுக்கா விட்டால், பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் உள்ளவர்கள். எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்